மோடி வரட்டும்..நாங்க போக மாட்டோம்! இன்று தெலுங்கானா வரும் பிரதமர் -புறக்கணிக்கும் கேசிஆரின் பிஆர்எஸ்
ஐதராபாத்: இன்று பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானா மாநிலத்துக்கு வருகை தரும் நிலையில் அவரது பயணத்தை புறக்கணிக்கப்போவதாக ஆளும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறிவித்து உள்ளது.
தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் அங்கு மத்திய அரசின் ரூ.6,100 கோடி மதிப்புடைய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அம்மாநிலத்துக்கு செல்கிறார்.

பொதுவாக ஒரு மாநிலத்துக்கு பிரதமர் செல்லும்போது அம்மாநில முதலமைச்சர் விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவரை வரவேற்பது மரபாக இருந்து வருகிறது. ஆனால், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கப்போவது இல்லை என பிஆர்எஸ் கட்சி அறிவித்து உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவுக்கு பயணித்தபோதும் அவரை சந்திரசேகர் ராவ் வரவேற்கவில்லை. அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட அரசு நிகழ்வுகளிலும் சந்திரசேகர் ராவ் கலந்துகொள்ளவில்லை. இதற்கு முன்பாக 4 முறை பிரதமர் மோடி தெலுங்கானா சென்றபோதும் அவரை வரவேற்காமல் புறக்கணித்து உள்ளார் சந்திரசேகர் ராவ்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமராவ், எங்கள் கட்சி தெலுங்கானா வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தை புறக்கணிக்க முடிவு செய்து இருக்கிறது. பிரதமரானதில் இருந்தே மோடி தெலுங்கானாவுக்கு எதிரான மனநிலையிலேயே இயங்கி வருகிறார்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலத்தை பிரித்தபோது பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்தது. ஆனால், பல வாக்குறுதிகளை அவர்கள் செயல்படுத்தவில்லை. தனது சொந்த மாநிலமான குஜராத்தில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் அவர் தொடங்கி வைத்த ரயில் பெட்டி தயாரிப்பு தெலுங்கானாவுக்கு வரவேண்டியது. ஆனால், அவர் தெலுங்கானாவில் ரூ.521 கோடியில் ரயில் பெட்டி தயாரிக்கும் ஆலையை அறிவித்தார்.
தெலுங்கானா மாநில நலன் கருதி பி.ஆர்.எஸ் அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு உரிய அனுமதியை வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தெலுங்கானா என்ற குழந்தையை உருவாக்கிவிட்டு தாயான ஆந்திராவை கொன்றுவிட்டதாக பிரதமர் மோடி நமது மாநிலம் பற்றி அவதூறாக பேசி உள்ளார். அவரது தெலுங்கானா விரோத போக்கை கண்டித்து வருகையை புறக்கணிக்க முடிவு செய்து இருக்கிறோம்." என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications