சொந்த கட்சிக்காரங்களே என்னை நம்ப மாட்றாங்களே.. ஐயோ! கேக் முன் அமர்ந்து ஓவென அழுத டிஆர்எஸ் எம்எல்ஏ
சர்ச் பாதிரியாரின் பிறந்தநாள் விழாவில் கேக் முன்பு கதறி அழுத பிஆர்எஸ் எம்எல்ஏ ராஜய்யா
ஹைதராபாத்: தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை நினைத்து பிறந்தநாள் விழாவில் கேக் முன்பு உட்கார்ந்து கொண்டு பிஆர்எஸ் எம்எல்ஏ ராஜய்யா அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்மைக்காலமாக சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எம்எல்சிக்கள் செய்வது எல்லாம் சிரிப்பை வரவழைக்கின்றன. அந்த வகையில் தேர்தல் என வந்துவிட்டால் துணி துவைத்து கொடுப்பது, அயர்ன் செய்து கொடுப்பது, பரோட்டா சுட்டு கொடுப்பது.. இவ்வளவு ஏன் தெலுங்கானாவில் தேர்தலின் போது கக்கா போன குழந்தைக்கு ஒரு வேட்பாளர் நான்தான் கழுவுவேன் அடம்பிடித்து கழுவிய சம்பவம் நடந்துள்ளது.
அது போல் சில மாநிலங்களில் சில அரசியல்வாதிகள் செய்யும் சம்பவங்கள் காமெடியை வரவழைக்கின்றன. அந்த வகையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்எல்ஏ ஒரு பிறந்தநாள் விழாவில் கேக் முன்பு உட்கார்ந்து அழும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தேவாலயம்
ஒரு தேவாலயத்தின் பாதிரியாரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு எம்எல்ஏ ராஜய்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையேற்று அவரும் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு சென்ற எம்எல்ஏ ராஜய்யா திடீரென கேக் முன்பு உட்கார்ந்து கொண்டு அழத் தொடங்கினார். அவருடன் இருந்தவர்கள் அவரை தேற்ற முயற்சித்தனர்.

தைரியம்
பின்னர் என்னெவென கேட்டதற்கு தன் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. அதை எதிர்கொள்ள தனக்கு தைரியம் இல்லை என கூறி அழுதார். சிலர் தரம் தாழ்ந்த அரசியல் செய்து வருகிறார்கள், முடிந்தால் இந்த குற்றச்சாட்டுகளை உடைத்துக் கொண்டு நிரூபித்து காண்பி என எனக்கு சவால் விடுக்கிறார்கள். என்னால் அவர்களை சமாளிக்க முடியவில்லை என கூறி அழுதார். மேலும் நான் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் கூறினார்.

கான்பூர் தொகுதி எம்எல்ஏ
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டேஷன்கான்பூர் எம்எல்ஏ தடிகொண்டா ராஜய்யா ஜானகிபுரம் கிராம பஞ்சாயத்து தலைவி நவ்யாவிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பொது கூட்ட மேடையில் நவ்யாவின் தோளில் கை போட்ட படி ராஜய்யா நின்றிருந்தார். தன் மீதான கையை எடுக்க வேண்டும் என்றும் தன்னிடம் ஒழுங்காக நடந்து கொள்ளுமாறும் நவ்யா பலமுறை அறிவுறுத்தியும் ராஜய்யா கேட்கவில்லை என்றார். மேலும் தனக்கு போன் செய்து தன்னை தனியாக வருமாறும் அழைத்தார் என பஞ்சாயத்து தலைவி புகார் கூறியிருந்தார்.

கிராம பஞ்சாயத்து
நான் அவருக்கு சாதகமாக நடந்து கொள்ளாததால் கிராம பஞ்சாயத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பல தொல்லைகளை ராஜய்யா கொடுக்கிறார். நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது எந்த முடிவையும் எடுக்க அனுமதிப்பதில்லை என நவ்யா குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் கடந்த 2019ஆம் ஆண்டு ஜன்கோன் மாவட்டத்தில் உள்ள சில்பூரில் உள்ள பள்ளிக்கு ராஜய்யா சென்றிருந்தார். அங்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும் விழாவில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சாப்பாட்டை ராஜய்யாவுக்கு தனது கைகளால் ஊட்டி விட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு விளக்கமளித்த எம்எல்ஏ, பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அவர் எனக்கு உணவு ஊட்டிவிட விரும்பினார். அதனால் அந்த மாணவியை எனது மகளாக கருதி உணவு ஊட்ட அனுமதித்தேன். இந்த உண்மை தெரியாத சிலர் என்னை விமர்சனம் செய்கிறார்கள் என ராஜய்யா விளக்கமளித்திருந்தார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங்












Click it and Unblock the Notifications