மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ பாஜகவிற்கு எதிராக எப்படி விசாரிக்கும்? தெலுங்கானா அரசு வாதம்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இருப்பதால் பாஜகவிற்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க கூடாது என தெலுங்கானா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க தெலுங்கனா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐ, பாஜகவிற்கு எதிரான வழக்கை விசாரிப்பதால் பயன் இல்லை என்று தெலுங்கானா அரசு வாதிட்டுள்ளது.
தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதியின் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததில் இருந்தே எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தங்கள் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக சந்திரசேகர் ராவின் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

விலைக்கு வாங்க முயற்சித்ததாக
தற்போது தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் சந்திர சேகர் ராவ் தனது கட்சியின் பெயரையும் பாரதிய ராஷ்டிரிய சமிதி என மாற்றியுள்ளார். மத்தியில் பாஜகவுக்கு எதிராக ஒரு அணியை ஒருங்கிணைப்பதில் ஆர்வம் காட்டி வரும் சந்திரசேகர் ராவ் அடிக்கடி வட இந்திய அரசியல் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க பாஜக முயற்சித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சந்திரசேகர் ராவின் கட்சி முன்வைத்தது.

சிபிஐக்கு மாற்றி உத்தரவு
4 எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ. 50 கோடி தருவதாக கூறி பேரம் நடத்தப்பட்டதாகவும் குதிரை பேரத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து இருப்பதாகவும் தெலுங்கானா அரசு கூறி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இது தொடர்பாக விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் தெலுங்கானா அரசு அமைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கான உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர் நீதிமன்றம், மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணைக்குழு (எஸ்.ஐ.டி) வை கலைத்து உத்தரவிட்டது. அதோடு இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றியும் உத்தரவிட்டது.

தெலுங்கானா அரசு எதிர்ப்பு
தெலுங்கானா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் கடும் அதிர்ச்சி அடைந்த அந்த மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. . உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக தெலுங்கானா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே மற்றும் மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் முறையிட்டனர்.

27- ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அப்போது தெலுஙகனா மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷய்ந்த் தவே, நீதிபதிகளிடம் கூறுகையில், தெலுங்கானா உயர் நீதிமன்றம் , எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். துஷ்யந்த் தவே கூறுகையில், பாஜகவிற்கு எதிராகத்தான் எப்.ஐ ஆரில் குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், சிபிஐயிடம் நாங்கள் எப்படி செல்ல முடியும். சிபிஐ அமைப்பை மத்திய அரசு கட்டுப்படுத்தும் போது எங்களை சிபிஐயிடம் அனுப்பினால் என்ன பயன் கிடைக்கப் போகிறது? என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications