ஜானி மாஸ்டர் தலைமறைவு? சிறுமியாக இருந்தபோதே பெண் உதவி நடன இயக்குநரிடம் எக்குதப்பு!
ஹைதராபாத்: பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய டான்ஸ் மாஸ்டர் ஜானி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர் மீது 21 வயது பெண் உதவி நடன இயக்குநர் பாலியல் பலாத்கார புகாரை அளித்த நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் புகார் கூறப்பட்டதிலிருந்தே ஜானி மாஸ்டர் தலைமறைவாக இருக்கிறார் என்கிறார்கள். இதுகுறித்து துணை கமிஷனர் ஸ்ரீனிவாஸ் கூறியிருப்பதாவது: பெண் புகாரை முழுமையாக பதிவு செய்துள்ளோம். மருத்துவ பரிசோதனைக்கு அந்த பெண்ணை அனுப்பியுள்ளோம்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜானி மாஸ்டர் தலைமறைவாக உள்ளார். சம்பவம் நடந்த போது புகார் தந்த பெண்ணின் வயது 18 வயதை பூர்த்தியடையவில்லை. எனவே அதுகுறித்து விசாரணை நடத்தி ஜானி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமா என்பது தெரியவரும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டுள்ளார். ஜானியை போலீஸார் தேடி வருகிறார்கள். மருத்துவ பரிசோதனையில் ஜானி எதிராக அறிக்கை வந்தால் அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
தமிழிலும் நடிகர்கள் விஜய், தனுஷ் உள்ளிட்டோருக்கு இவர் நடன இயக்குநராக இருந்துள்ளார். காந்த கண்ணழகி, ரவுடி பேபி, செல்லம்மா, ரஞ்சிதமே, அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா, ஜெயிலர் படத்தில் காவாலா, புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனத்தை அமைத்துள்ளார்.
இப்படி புகழ் பெற்ற ஜானி மாஸ்டர் மீத 21 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரை தெரிவித்துள்ளார். அதாவது அந்த பெண் ஜானி மாஸ்டருடன் பணியாற்றிய போது சென்னை உள்ளிட்ட பல்வேறு சூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு தன்னை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் சைபராபாத்தில் உள்ள ராய்துர்கம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த பெண் கூறியிருப்பதாவது: நான் கடந்த சில மாதங்களாக ஜானி மாஸ்டருடன் சில திரைப்படங்களில் பணியாற்றினேன். படப்பிடிப்புக்காக நான் அவருடன் சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற போது என்னை அவர் பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.
அது போல் ஹைதராபாத்தில் நான் வசிக்கும் நார்சிங்கி பகுதியில் உள்ள வீட்டில் வைத்தும் அவர் என்னை பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜானி மாஸ்டர் தொடர்ந்து இது போல் சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜானி மாஸ்டர், ஆந்திரா மாநிலத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். அவர் மீது பாலியல் புகார் வந்ததை அடுத்து பவன் கல்யாண், ஜானி மாஸ்டரை தனது கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். ஹேமா அறிக்கை வெளியாகி புயலை கிளப்பிக் கொண்டிருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications