முதல்வரின் அடுத்த அதிரடி.. 3வது அலையா?.. பள்ளிகளுக்கு புது உத்தரவு போட்ட ஜெகன்.. விறுவிறு பணிகள்
3வது அலையை எதிர்கொள்ள ஆந்திர மாநிலம் தயாராகி வருகிறது
ஹைதராபாத்: கொரோனா 3வது அலையை எதிர்கொள்வதற்காக, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மேற்கொண்டுள்ள முயற்சிகள் பிற மாநில மக்களை பெரிதும் ஈர்த்து வருகிறது.
நாடு முழுவதும் பல்வேறு மாநில முதல்வர்கள் இந்த கொரோனா காலத்திலும் சிறப்பாக சேவை புரிந்து வருகின்றனர்...
தங்கள் மாநில மக்களை தொற்றில் இருந்து காப்பதற்காக, ஏராளமான முன்னெடுப்புகளை செய்தாலும், மற்றொரு பக்கம் நலத்திட்டங்களையும் அறிவித்து, அதை உடனடியாக செயல்படுத்தியும் வருகிறார்கள்.. அதில் ஒருவர்தான் ஜெகன்மோகன் ரெட்டி.

புதுமை
அதனால் தான் என்னவோ ஆந்திர அரசியல் வரலாற்றில் முதல் முறையாக வேறு எந்த முதல்வருக்கும் இல்லாத வகையில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது புதுமையாக பார்க்கப்படுகிறது.. இந்த கோவிலும் ஒரு புதுமை உள்ளது, அதாவது, பொதுவாக, கோவில்களில் உண்டியல் வைப்பார்கள்.. ஆனால் இந்த கோவிலில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிய புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா
தங்கள் மாநில முதல்வரை சிறப்பிக்க அம்மக்கள் இப்படி செய்தாலும், மக்களை காக்க முதல்வரும் தொடர் நடவடிக்கைகளில் விடாமல் ஈடுபட்டுவருகிறார்.. அந்த மாநிலத்திலும் தொற்று பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.. 3வது அலை வர போவதாக, ஆய்வாளர்கள் நம்மை அலர்ட் செய்து கொண்டே இருக்கிறார்கள்.. அந்த வகையில் ஆந்திர மாநிலமும் ஒன்று.

தடுப்பூசி
ஆந்திர மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,90,910 ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது... இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,000-ஐ நெருங்கி உள்ளது.. ஆந்திராவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,00,000-ஆக அதிகரித்துள்ளது, இதைதவிர தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதில் அம்மாநிலம் தீவிர கவனம் செலுத்தியும் வருகிறது.

உத்தரவுகள்
இந்நிலையில், வரப்போகும், 3வது அலை பரவலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை இப்போதே கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டார் ஜெகன்... நேற்றுகூட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்... ஆந்திர பிரதேச மாநிலத்தில், கடந்த திங்கட்கிழமை முதல் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், இண்டர்மீடியட் பள்ளிகளும் திறக்கப்பட்டன... கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அங்கே பள்ளிகள் இயங்கி வருகின்றன.

அறிகுறி
எனினும், 3வது அலையை எதிர்கொள்ளும் வகையில் முதல்வர் அந்த ஆலோசனை கூட்டத்தில் பேசும்போது, "கிராம, வார்டு செயலகங்களை கொரோனா சென்ட்டர்களாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்... மாணவர்கள் யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தால் பள்ளியின் அனைத்து மாணவ, மாணவியருக்கும் கொரோனா டெஸ்ட் மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள்
இதற்காகவே அந்த குறிப்பிட்ட பள்ளியில், கொரோனா டெஸ்ட் மையம் ஒன்றை அமைக்க வேண்டும்... இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதால், திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய சடங்குகளுக்கு செல்வோர், முன் அனுமதி பெற வேண்டும்... ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை 30 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும்" என்று கூறியுள்ளார்.. தொற்று பாதிப்பு குறையவும், ஓரிரு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.. ஆனால், திறந்த ஒரே வாரத்தில் அந்த மாணவர்களில் சிலருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், சில பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.

பாதிப்புகள்
தமிழகத்திலும் தொற்று பரவலுக்கு பயந்துதான் பள்ளிகளை இன்னும் திறக்க முடியாமல் உள்ளது.. எனினும் ஆந்திராவில் தொற்று பாதிப்பு இருந்தாலும், அதற்காக திறக்கப்பட்ட பள்ளிகளை மூடிவிடாமல் குறிப்பிட்ட பள்ளியிலேயே கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என்று ஜெகன் மோகன் பிறப்பித்துள்ள உத்தரவு பிற மாநிலங்களையும் யோசிக்க வைத்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications