பிரச்சார களத்திற்கு வருகிறார் சோனியா காந்தி.. தெலுங்கானாவில் அனல் பறக்கும் தேர்தல்
ஹைதராபாத்: தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், சோனியா காந்தி தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
சோனியா காந்தியின் பிரச்சாரம் கடந்த தேர்தலில் எடுபடவில்லை என்ற போதிலும் இம்முறை அவரது பிரச்சாரத்தை பெரிதாக நம்பியுள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சி.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தெலுங்கானாவில் மூன்று இடங்களில் சோனியா காந்தி பிரச்சாரம் செய்தார். இம்முறை ஒரு இடத்தில் மட்டும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

ஹெலிகாப்டர்
தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர்.சி.குந்தியா இதுபற்றி கூறுகையில், வாரங்கல் நகரத்தில் சோனியா காந்தியின் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால், குறிப்பாக ஹெலிகாப்டர் பயணம் தொடர்பான சில சிக்கல்கள் காரணமாக நவம்பர் 23ஆம் தேதி மெட்கல் பகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று கூறினார்.

சோனியா காந்தி
இந்தப் பகுதி தலைநகர் ஹைதராபாத் அருகே உள்ள கிரேட்டர் ஹைதராபாத் பகுதியில் அமைந்துள்ளது. அதேநேரம் சோனியா காந்தியின் இந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இணைந்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

சோனியா காந்தி பங்களிப்பு
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உதயமானதில், சோனியா காந்தியின் பங்களிப்பு இருப்பதால் அவர் மீது தெலுங்கானா மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாக அக்கட்சி கருதுகிறது. ஆனால் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தெலுங்கானா மாநிலம் உதயமானதன் முழு பலனையும் சந்திரசேகரராவ் பெற்றார்.

மெத்தனம்
சந்திரசேகரர்ராவ் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் மாநில அளவிலான நிர்வாகிகளின் மெத்தனம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே இம்முறை தெலுங்கானா மக்களின் அன்பை சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு திருப்ப, அவரது பிரச்சாரம் பயன்படும் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். டிசம்பர் 7ம் தேதி தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும், சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications