Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெலுங்கானாவில் 'இந்திரா அம்மா ராஜ்ஜியம்'-இந்திரா காந்தியை காங்கிரஸ் முன்னிறுத்துவது எதனால் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றிவிடமாட்டோமா? என்கிற பெரும் பதைபதைப்பில் இருந்து வருகிறது காங்கிரஸ் கட்சி.

ஆந்திரா ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காலத்தில் காங்கிரஸ் அசைக்க முடியாத ஆகப் பெரும் சக்தியாக இருந்தது. காங்கிரஸின் கோட்டையாக இருந்த ஆந்திராவில் முதலில் தெலுங்குதேசம் கட்சி, காங்கிரஸை மண்ண கவ்வ வைத்தது. அதன் பின்னர் 2009-ல்தான் காங்கிரஸ் வெல்ல முடிந்தது. பின்னர் ஜெகன் மோகன் தனிக்கட்சி தொடங்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நிலையில் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி கேள்விக்குறியாகிவிட்டது.

Congress hopes Indiramma Rajyam promise in Telangana Assembly Election

தெலுங்கானாவில் பிஆர்எஸ் அரசு: ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானா மாநிலம் இதுவரை 2 சட்டசபை தேர்தல்களை எதிர்கொண்டது. இந்த 2 தேர்தல்களிலும் காங்கிரஸ் கண்காணாத திசைநோக்கி தள்ளிவிடப்பட்டது. தெலுங்கானா மாநிலத்தில் அசைக்க முடியாத அளவுக்கு இப்போதைய ஆளும் பிஆர்எஸ் கட்சி விஸ்வரூபம் எடுத்தது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கரைந்து போய் அந்த இடத்தில் பாஜக மையம் கொள்ளும் என்பதாகத்தான் களநிலவரம் இருந்தது. தற்போது தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் விஸ்வரூபம் எடுத்து ஆளும் பிஆர்எஸ் ஆட்சியை அசைத்துப் பார்த்து கொண்டிருக்கிறது. தெலுங்கானாவில் 2-வது இடத்தில் இருந்த பாஜக, இப்போது சிங்கில் டிஜிட் இடங்களிலாவது ஜெயிக்குமா? என்கிற வாழ்வா? சாவா? போராட்டத்தில் இருக்கிறது.

காங்கிரஸ் விஸ்வரூபம் எப்படி சாத்தியம்?: தெலுங்கானா களநிலவரம் அப்படியே தலைகீழாகிப் போனதில் பிஆர்எஸ்- பாஜக இடையேயான மறைமுக உறவு எக்ஸ்போஸானதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர்களை பல வழக்குகளில் வேட்டையாடிய பாஜக, பிஆர்எஸ் தலைவர்களை சிறைக்கு அனுப்பாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது பாஜக- பிஆர்எஸ் திரைமறைவு உறவை வெட்டவெளிச்சமாக்கியது. இந்த இடத்தை சரியாக காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது. என்னதான் இந்தியா கூட்டணி அமைத்திருந்தாலும் பிஆர்எஸ் உள்ளே வராமல் கவனமாக இருந்தது காங்கிரஸ். இதுதான் தெலுங்கானாவில் காங்கிரஸ் இப்போது ருத்ர தாண்டவமாடுவதற்கும் அடித்தளமாக இருந்தது.

இந்திரா அம்மா ராஜ்ஜியம்: தெலுங்கானாவில் விஸ்வரூபம் காட்டுகிற காங்கிரஸ் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போன 'இந்திரா அம்மா ராஜ்ஜியம்' அமைப்போம் என்கிற ஒரு வாக்குறுதியை ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் தவறாமல் முன்வைத்தது. பிரியங்கா காந்தியும் கூட, என்னை நீங்கள் இந்திரா அம்மாவாக பார்க்கிறீர்கள்.. இந்திரா அம்மா ராஜ்ஜியம் நிச்சயம் அமைப்போம் என பிரசாரம் செய்தார். அப்படி என்ன தெலுங்கானாவுக்கும் இந்திரா காந்தி அம்மையாருக்குமான தொடர்பு?

நாகர்ஜூன சாகர் அணை: காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரசாரம் கூட்டம் ஒன்றில் பேசுகையில், நாகர்ஜூன சாகர் அணையை இந்திரா அம்மையார் கட்டாமல் இருந்தால் இன்று இந்தியாவின் நெற்களஞ்சியமாக தெலுங்கானா உருவாகி இருக்காது; தெலுங்கானா விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றியவர் என கூறியிருந்தார்.

மேடக் எம்பி இந்திரா காந்தி: இதுமட்டுமல்ல தெலுங்கானாவுக்கும் இந்திராவுக்குமான உறவும் நெருக்கமானது. 1980 லோக்சபா தேர்தலில் இந்திரா காந்தி, உ.பி. ரேபரேலியில் மட்டும் போட்டியிடவில்லை; இன்றைய தெலுங்கானாவின் மேடக் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வென்ற இந்திரா காந்தி அம்மையார் ரேபரேலி தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்ட போது அவர் மேடக் தொகுதி எம்.பி.யாகவே மரணத்தை தழுவினார். இதுவும் தெலுங்கானா மக்களுக்கும் இந்திரா காந்தி அம்மையாருக்குமான நெருக்கமாகும்.

கை சின்னம் அரியணை ஏறுமா?: இந்திரா காந்தி அம்மையார் இறந்து 40 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அவருக்கும் தெலுங்கானாவுக்குமான உறவுகளை உயிர்ப்பித்து வாக்குகளாக அறுவடை செய்வதில் முனைப்பாக இருக்கிறது காங்கிரஸ். தெலுங்கானா மக்களிடையே 'இந்திரா அம்மா ராஜ்ஜியம்' என்ற காங்கிரஸின் இந்த முழக்கம் கை கொடுக்குமா? கை சின்னத்தை அரியணை ஏற்றுமா? என்பது டிசம்பர் 3-ந் தேதி தெரிந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+