தெலுங்கானாவில் மாஸ் காட்டும் காங்கிரஸ்.. பரிதாப நிலையில் பாஜக.. Democracy Times கருத்துக் கணிப்பு
ஐதராபாத்: தெலுங்கானாவில் நாடாளுமன்ற தேர்தல் தற்போது நடந்தால், சந்திரசேகர ராவ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்து காங்கிரஸ் அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்று Democracy Times Network நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தெலுங்கானாவில் தேர்தல் களம் உச்ச கட்ட அனல் பறக்க தொடங்கி விட்டது. ஏனென்றால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே சட்டசபை தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டதால் தெலுங்கானாவில் தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

தெலுங்கானாவில் தற்போது கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது.
காங்கிரசுக்கு வாய்ப்பு: இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தாலும், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி தான் அதிக இடங்களை பெற வாய்ப்பு இருப்பதாக Democracy Times Network நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
இதேபோல மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் 6 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று Democracy Times Network நிறுவனம் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. இதேபொல் பாஜக 2 தொகுதிகளில் வெற்றி பெற்று 23 சதவீத வாக்குகளை பெறும் என்று Democracy Times Network கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
தெலுங்கானா கருத்துக் கணிப்பு முடிவுகள் விவரம்:
மொத்த தொகுதிகள் - 17
காங்கிரஸ் - 08 (37 சதவீத வாக்குகள்)
பிஆர்எஸ் - 06 (34 சதவீத வாக்குகள்)
பாஜக - 02 (23 சதவீத வாக்குகள் )
மற்றவை: 1 (6 சதவீத வாக்குகள் ).
-
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications