ஜெ. பாணியில் காங். அதிரடி! தெலுங்கானா புதிய சபாநாயகர் 'தலித்'- யார் இந்த பிரசாத் குமார்?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் புதிய சபாநாயகராக தலித் சமூகத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பிரசாத் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா சபாநாயகர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, முதல்வராக ரேவந்த் ரெட்டியை அறிவித்தது. ரேவந்த் ரெட்டி தலைமையில் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர். அனைவருக்கும் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போது தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டசபையின் இடைக்கால சபாநாயாராக அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டார். ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ, 6 முறை தேர்தலில் வென்றவர் அக்பருதீன். ஓவைசியின் சகோதரர். ஆனால் அக்பருதீன் ஓவைசி, இடைக்கால சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல்வேறு சர்ச்சைகளில் அக்பருதீன் ஓவைசி சிக்கியவர் என்பதால் இந்த எதிர்ப்பை தெரிவித்தது பாஜக. அக்பருதீன் ஓவைசி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய முடியாது என நேற்று பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பும் செய்தனர். இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் ஓவைசிக்கும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் தெலுங்கானா சட்டசபையின் புதிய சபாநாயகர் பிரசாத் குமார் என ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இடைக்கால சபாநாயகரால் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் தலித் என்பதால் ஆளும் கட்சியினராலே புறக்கணிக்கப்பட்டார் என்ற காரணத்துக்காகவே அதிமுக சீனியர் 'தனபால்' உணவுத் துறை அமைச்சர், சபாநாயகர் என ஜெயலலிதாவால் அரியணையில் உட்கார வைக்கப்பட்டார். இப்போது தெலுங்கானாவில் காங்கிரஸும் இதே பார்முலாவை பின்பற்றி உள்ளது. ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வராக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகர் பதவி தலித் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள புதிய சபாநாயகர் வேட்பாளர் பிரசாத் குமார் சர்ச்சைகளில் சிக்காதவர். ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தில் கிரண்குமார் ரெட்டி முதல்வராக இருந்த போது அமைச்சர் பதவி வகித்தவர். 2014, 2018 சட்டசபை தேர்தல்களில் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தார் பிரசாத் குமார். ஆனால் இந்த தேர்தலில் தம்மை ஏற்கனவே தோற்கடித்த பிஆர்எஸ் கட்சியின் மேதுகு ஆனந்த்தை 12,893 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் பிரசாத் குமார்.
தெலுங்கானா தனி மாநிலம் உருவான பின்னர் மதுசூதனா சாரி முதல் சபாநாயகராக இருந்தார். 2018-2023 -ல் ஶ்ரீவாஸ் ரெட்டி சபாநாயகராக பதவி வகித்தார். தற்போது 3-வது சபாநாயகராக பிரசாத் குமார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications