"டார்ச்சர்".. நான் செத்துட்டா யாருங்க பொறுப்பு.. ஓடும் ஆம்புலன்ஸில் கதறி.. வீடியோ போட்ட கான்ஸ்டபிள்
ஹைதராபாத்: "இப்படி டார்ச்சர் பண்றீங்களே.. என் உயிருக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?" என்று கொரோனா பாதித்த போலீஸ்காரர் ஒருவர் ஆம்புலன்ஸில் கதறி கொண்டே வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தொற்று வேகமாக பரவி வருகிறது.. இதனால் அந்தந்த மாநில அரசுகள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றன.. பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து, மக்களை காப்பாற்ற போராடி வருகிறது.
இதில் மருத்துவர்களை போலவே காவல்துறையும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு வருகின்றனர்.. எனினும், களப்பணியில் ஈடுபடுவோரையும் தொற்று பாதித்து விடுகிறது.. சென்னையில் மட்டும் கடந்த வாரம் 2 நாளில் 15 போலீஸ்காரர்கள் தொற்றினால் மரணமடைந்து இருக்கிறார்கள்.

அனந்தபுரம்
இதுபோலவே ஆந்திராவிலும் நிலைமை மோசமாக இருக்கிறது.. அங்கு நடந்த ஒரு சம்பவம்தான் இது.. அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்திரி ஸ்டேஷனில் போலீசாக வேலை பார்த்து வருபவர் கணேஷ்... கடந்த 21ம் தேதி கணேஷுக்கு லேசாக கொரோனா அறிகுறி இருந்துள்ளது.. அதனால், உடனடியாக டெஸ்ட் செய்து கொண்டதில், கொரோனாவும் உறுதியானது. எனவே, டாக்டர்கள் அவரை 5 நாட்கள் வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுக்க சொல்லி, சில ஆலோசனைகளையும் தந்துள்ளனர்.

லீவு மறுப்பு
உடனே கணேஷூம், இது குறித்து ஸ்டேஷனில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் காசா உசேனிடம் சொல்லி உள்ளார்.. ஆனால், காசா உசேன், கணேஷூக்கு லீவு தரவில்லை என தெரிகிறது.. மேலும், கூடுதல் பணி அழுத்தமும் தந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது விஷயம் என்னவென்றால், கணேஷூக்கு உடம்பு மேலும் மோசமாகிவிட்டது. அதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கக்கூடிய நிலைமைக்கு வந்துள்ளார். இதற்காக ஆம்புலன்சில் அவரை அழைத்து சென்றுள்ளனர்.

கணேஷ்
அப்போது அந்த ஆம்புலன்சிலேயே, ஆதங்கத்துடனும், மன வேதனையுடனும் பேசி ஒரு வீடியோ எடுத்துள்ளார் கணேஷ்.. அதில், "உடம்பு சரியில்லை என்று லீவு கேட்டும் தரல... அனந்தபுரம், தாடிபத்திரி, குத்தி என செல்லும்படி பணி அழுத்தம் தந்து, என்னை வேலை செய்ய வைத்தனர்.. இதனால் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டது..

வீடியோ
இப்போ ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸில் போய் கொண்டிருக்கிறேன்.. எனக்கு ஏதாவது ஒன்னு ஆயிடுச்சுன்னா, எங்க குடும்பத்தை யார் கவனிப்பாங்க? என் உயிருக்கு ஏதாது ஆனால், அதுக்கு முழு பொறுப்பும் எஸ்ஐ-யும் இன்ஸ்பெக்டரும்தான், பொறுப்பேற்க வேண்டும்" என்று கதறி உள்ளார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications