என்ன இது? ஆப்ரிக்காவில் இருந்து ஆந்திரா வந்தவர்களை காணவில்லை.. 30 பேர் மாயம்.. அதிகாரிகள் அதிர்ச்சி
ஹைதராபாத்: தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 30 பேர் ஆந்திர பிரதேசத்தில் காணாமல் போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் இரண்டு பேரிடம் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூரில் ஒரு மருத்துவர் இன்னொரு தென்னாப்பிரிக்க பயணி ஆகியோரிடம் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க ஓமிக்ரான் கொரோனா வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இதுவரை உலகம் முழுக்க 30 நாடுகளில் அதிகாரபூர்வமாக ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

காணவில்லை
இந்த நிலையில்தான் ஆந்திராவில் இருக்கும் விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சுய விவர படிவங்களை நிரப்ப வேண்டும் என்று விதி உள்ளது. அதாவது எங்கிருந்து வருகிறார்கள். அடுத்த எங்கே செல்கிறார்கள். ஆந்திராவில் எங்கே தங்குவார்கள் என்று விவரங்களை வெளியிட வேண்டும். கடந்த இரண்டு நாட்களில் பலபேர் இப்படி வெளிநாடுகளில் இருந்து ஆந்திராவின் வெவ்வேறு விமான நிலையங்களுக்கு வந்துள்ளனர்.

60 பேர்
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதை சோதிக்க வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இதில் 60 பேர் விஷாகப்பட்டினத்தில் தங்க போவதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் விலாசம், போன் எண் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். இதில் 30 பேர் விஷாகப்பட்டினத்தில் எங்கே தங்கி உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

9 பேர்
ஆனால் மற்ற 30 பேர் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. 30 பேர் விஷாகப்பட்டினத்தில் எங்கே தங்கி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவர்களின் போன் எண்களுக்கு போன் செய்தாலும் போன் செல்வது இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் கொடுத்த விலாசத்தை சோதனை செய்ததிலும் அது பொய்யான விலாசம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எங்கே
பொய்யான விலாசம் கொடுத்து இவர்கள் அதிகாரிகளை ஏமாற்றி உள்ளனர். ஓமிக்ரான் கொரோனா பரவும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் எங்கே என்று தெரியவில்லை. இதில் 9 பேர் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள்.
Recommended Video

ஆப்பிரிக்கா
அதிலும் 2 பேர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர். ஒருவர் போட்ஸ்வானாவை சேர்ந்தவர். இவர்கள் எங்கே என்று தெரியவில்லை என்பதால் ஆந்திர பிரதேசத்தில் தற்போது தீவிர தேடுதல் வேட்டை நடந்து கொண்டு இருக்கிறது. இவர்களை டிரேஸ் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications