நள்ளிரவில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! பசு பாதுகாவலர் மீது சரமாரி துப்பாக்கி சூடு! என்ன நடந்தது?
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் காட்கேசர் என்ற பகுதியில் பசு கடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த சோனு என்பவர் மீது துப்பாக்கி சீடு நடத்தப்பட்டுள்ளது.. பசு கடத்தும் கும்பலைச் சேர்ந்த சிலர், சோனுவை குறிவைத்து மிகக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சோனு.. பசு கடத்தலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர், கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாகவே பசு கடத்தலுக்கு எதிராகப் போராடி வருகிறார். இதற்கிடையே இவர் மீது நேற்று புதன்கிழமை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படுகாயம்
இதில் படுகாயமடைந்த சோனு இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சோனுவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றனர். தனது மகன் உயிருக்குப் போராடி வருவதாகக் கூறிய சோனுவின் தாயார், பசுக்களைப் பாதுகாக்க மேலும் பல மகன்களைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சோனுவின் தாயார் மேலும் கூறுகையில், "எனது மகன் உயிருக்குப் போராடுகிறான். ஆனால், பசுக்களைப் பாதுகாக்க மேலும் 10 மகன்களையும் தியாகம் செய்வேன். நேற்று எனது மகன் போன் செய்து.. காட்கேசரில் தன்னை யாரோ சுட்டுவிட்டதாகக் கூறினார். கடந்த 5-6 ஆண்டுகளாக எனது மகன் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார். குற்றவாளிகளை அரசு கைது செய்ய வேண்டும்" என்றார்.
என்ன நடந்தது!
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சோனுவை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், பசு கடத்தல் தொடர்பாகத் தன்னிடம் முக்கிய தகவல்கள் இருப்பதாகவும் காட்கேசர் அருகே வந்தால் அதை சொல்வதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி, சோனுவும் அங்குப் போய் இருக்கிறார். அப்போது பசு கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் சோனுவை சுட்டுள்ளார். இதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவத்திற்கு தெலுங்கானா பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.. பசு கடத்தலைத் தடுக்க முயன்றபோது சோனு சுடப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
பாஜக கண்டனம்
இது தொடர்பாக தெலுங்கானா பாஜகவின் மாதவி லதா கூறுகையில், "பசு கடத்தலுக்கு எதிராகப் போராடிய அலியாஸ் சோனு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.. பசுக்களைப் பாதுகாப்பவர்கள் தான் அரசியலமைப்பையும் பாதுகாக்கிறார்கள். இந்த விவகாரத்தில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் குற்றவாளியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்றால், போலீசார் அவர்களுக்கு உதவுகிறார்கள் என்று அர்த்தம்.. குற்றவாளி மஜ்லீஸ் கட்சியைச் சேர்ந்தவர். இது திட்டமிடப்பட்ட கொலை முயற்சி" என்றார்.
கிஷன் ரெட்டி
மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி இது குறித்து, "ஹைதராபாத்தில், ரச்சகொண்டா அருகே காட்கேசர் பகுதியில், பசுக்களைச் சட்டவிரோதமாகக் கடத்தும் ஒரு கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதில் சோனு படுகாயமடைந்துள்ளார். அவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நான் டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன் பேசினேன். தெலுங்கானாவில் இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று டிஜிபி என்னிடம் கூறினார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. தீபாவளிக்கு 2-3 நாட்களுக்கு முன்பு, நிஜாமாபாத்தில் ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது ரவுடி நடத்திய தாக்குதலில் காவலர் கொல்லப்பட்டார். ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள அனைத்து மாஃபியா நடவடிக்கைகளையும் நிறுத்த கடும் நடவடிக்கை தேவை. இது போலீசாரின் பொறுப்பு. ஆனால் அவர்கள் தங்கள் வேலையைச் செய்வதில்லை. இந்த மாஃபியாக்களுடன் போலீசார் கூட்டுச் சேர்ந்துள்ளனர்" என்றார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications