காதல் திருமணம் செய்த துணை தாசில்தாரின் கணவர் ஆணவக்கொலை.. திருமணத்தன்று இரவே கொடூர சம்பவம்!
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் துணை தாசில்தாரின் கணவர், திருமணத்தன்றே கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் சகோதரர்கள், அந்த நபரை அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆணவக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் துவாரபூடி கிராமத்தை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். அதே கிராமத்தில் வசிக்கும் சந்தியா என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவருமே பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது. சந்தியாவும் சூரியபிரகாஷை காதலித்துள்ளார்.

சந்தியா கோதாவரி மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மண்டல வருவாய் அதிகாரி அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். சூரியபிரகாஷின் தந்தை அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். சூரியபிரகாஷ் தனது தந்தைக்கு உதவியாக கடையில் இருந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு சந்தியாவின் மூத்த சகோதரர் சந்திரபால் மற்றும் இளைய சகோதரர் கிரிபாபு ஆகியோர் சாதி வேறுபாடுகளைக் காரணம் காட்டி திருமணத்தை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று சந்தியாவும், சூரிய பிரகாஷும் இரு குடும்பத்தினருக்கும் தெரியாமல் கோவில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை சந்தியா தனது சகோதரர்களுக்கு போனில் அனுப்பி உள்ளார். இதனால், கடும் கோபம் அடைந்த சந்தியாவின் சகோதர்கள், சந்தியாவிடம் ஆத்திரத்தோடு பேசியுள்ளனர். வெறி அடங்காத நிலையில், சூரிய பிரகாஷை கொல்லத் திட்டமிட்டுள்ளனர்.
திருமணமான புதுமண தம்பதி இரவில் துவாரபூடி கிராமத்தில் உள்ள மணமகனின் வீட்டிற்கு முதலிரவு கொண்டாடுவதற்காக வந்தனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. வழக்கமாக துணிக்கடையை பூட்டி விட்டு இரவு வீட்டிற்கு வரும் அப்பாவின் வருகைக்காக சூரியபிரகாஷ் வீட்டின் வெளியே காத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தியாவின் சகோதரர்கள் பிரகாஷை மிகவும் கொடுரமாக கற்களை கொண்டு தாக்கினர்.
இதில் நிலைகுலைந்துபோன பிரகாஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். உயிருக்கு உயிராகக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரகாஷ், திருமணத்தன்றே தனது சகோதரர்களால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிழே விழுந்ததை கண்டு சந்தியா கூச்சலிட்டு புலம்பி அழுத்துள்ளார்.
அதற்குள் ஒட்டுமொத்த கிராமமே அங்கு கூடிவிட்டது. குற்றவாளிகள் தப்பி ஓட முயன்ற நிலையில், அப்பகுதி மக்கள் அவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் திருமணம் செய்து கொண்ட அன்றே, துணை தாசில்தாரின் கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் செய்து கொண்ட சந்தியாவும், சூரியபிரகாஷும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications