Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஸ் ஸ்டாண்டில்.. கிட்ட நெருங்கி வந்த பெண்.. தடுமாறிய இளைஞர்.. கடைசியில பார்த்தால் 2வது நாளே.. ஓ காட்

இளம்பெண்ணை கொன்று சடலத்தை டிரம்மிற்குள் திணித்த நபர் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மாதக்கணக்கில் பூட்டி வைத்த வாடகை வீட்டிற்கு, கரண்ட் பில் மட்டும் மாத மாதம் அதிகமாகவே வந்து கொண்டிருந்ததாம்.. எப்படி?

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம் கொம்மாடி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்... இவர் தன்னுடைய வீட்டை கடந்த 2020ம் ஆண்டு ரிஷி என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.. ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாலகொண்டாவை சேர்ந்தவர் இந்த ரிஷி.. 35 வயதாகிறது.

ரிஷியை வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு ஒரு கிராமத்தில் தங்கி இருந்தார் ஹவுஸ் ஓனர் ரமேஷ்.. வாடகை வீட்டில் ரிஷி, தன்னுடைய தங்கியிருந்தார்.. அதே பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் ஷாப்பில் வேலை செய்தும் வந்தார்.

ரிஷி

ரிஷி

கடந்த வருடம் ஜூலை மாதம், ஹவுஸ்ஓனருக்கு ரமேஷ் போன் செய்து, "பிரசவத்திற்காக மனைவியை சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறேன்.. கொஞ்ச நாளில் சிறிது திரும்பி விடுவேன்" என்று சொல்லிவிட்டு போனார்.. ஆனால், ஒரு வருஷம் ஆகியும், ரிஷி திரும்பி வரவில்லை.. இந்த வருடமாகவே வாடகையும் தரவில்லை.. எனவே ஹவுஸ் ஓனர் ரமேஷ், ரிஷிக்கு போன் செய்து கேட்டார்.. அதற்கு அவர், "நான் இப்போது சொந்த ஊரான பாலகொண்டாவில்தான் இருக்கிறேன்.. எனக்கு வேலை எதுவும் சரியாக அமையவில்லை.. இல்லை. வேலை கிடைத்தவுடன் வாடகை பணத்தை தந்துவிடுகிறேன்" என்று சொல்லி உள்ளார்.

கரண்ட் பில்

கரண்ட் பில்

இப்படியே ஒரு வருடமாகிவிட்டது.. ஆனால், பூட்டு போட்ட வாடகை வீட்டின் கரண்ட் பில் மட்டும் அதிமாகி கொண்டே வந்தது.. பூட்டிய வீட்டில் எப்படி இந்த அளவுக்கு கரண்ட்பில் வரும் என்று ஹவுஸ் ஓனர் ரமேஷூக்கு சந்தேகம் இருந்து கொண்டே வந்தது.. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, ஹவுஸ் ஓனர் பூட்டப்பட்டிருந்த வீட்டிற்கு வந்தார்.. ரொம்ப நாளாகவே வீடு பூட்டியே இருப்பதால், அதை சுத்தம் செய்து, வேறு யாருக்காவது வாடகைக்கு விடலாம் என்று நினைத்து வந்திருந்தார்.. வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றால், குப்பென்று துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ந்துபோன ரமேஷ், துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என்று தேடினார்..

தண்ணீர் டிரம்

தண்ணீர் டிரம்

அப்போதுதான், அங்கிருந்த ஒரு தண்ணீர் டிரம்மில் இருந்து நாற்றம் வருவது தெரிந்தது.. அதன் அருகில் சென்று பார்த்தபோது, அதற்குள் ஒரு எலும்புக்கூடு இருப்பதை பார்த்து அலறி வெளியே ஓடிவந்தார்.. பிறக, உடனடியாக மதுரவாடா போலீசாருக்கு தகவல் சொன்னார்.. போலீசாரும் விரைந்து வந்து பார்த்தபோது, எலும்புக்கூடு பெண் சடலம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பிவைத்தனர்... விசாரணையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது... இதையடுத்து 5 பேர் கொண்ட தனிப்படை உடனடியாக அமைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் முதல் விசாரணையை துவக்கியதே ரிஷியிடம்தான்..

எலும்புக்கூடு

எலும்புக்கூடு

போலீசாரிடம் வாக்குமூலம் தந்தபோதுதான், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.. மனைவியை பிரசவத்துக்காக, சொந்த ஊருக்கு அழைத்து சென்று மாமியார் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு, உடனே அங்கிருந்து விசாகப்பட்டினம் திரும்ப முடிவு செய்துள்ளார் ரிஷி.. அதற்காக ஸ்ரீகாகுளம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து நின்றுள்ளார்.. பஸ்சுக்காகவும் காத்திருந்தார். அப்போது 25 வயதுள்ள இளம்பெண், ரிஷி பக்கத்தில் வந்து நின்றுள்ளார்.. அந்த பெண்ணே தன்னை அறிமுகம் செய்து கொண்டு, ரிஷியிடம் நெருங்கி பேசியுள்ளார்..

உல்லாசம்

உல்லாசம்

கொஞ்ச நேரத்திலேயே 2 பேரின் செல்போன் நம்பரும் பஸ் ஸ்டாண்டிலேயே பரிமாறி கொள்ளப்பட்டது.. இதற்கு பிறகு, ரிஷி பஸ் ஏறி விசாகப்பட்டினம் வந்துவிட்டார்.. இந்த சம்பவம் நடந்து 2வது நாளே, பஸ் ஸ்டாண்டில் அறிமுகம் ஆன பெண், ரிஷிக்கு போன் செய்துள்ளார்.. உங்களை நேரில் பார்க்க வேண்டும்.. வரலாமா? என்று கேட்டுள்ளார். ரிஷியும் சம்மதம் சொல்லி உள்ளார். மறுநாள் காலையிலேயே அந்த பெண், ரிஷியின் வாடகை வீட்டுக்கு வந்துவிட்டார்.. அன்றிரவு 2 பேருமே உல்லாசமாக இருந்துள்ளனர். மறுநாள் காலை அந்த பெண் தன்னுடைய செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்..

வாக்குவாதம்

வாக்குவாதம்

அதற்கு ரிஷி, "இப்போதைக்கு தன்னிடம் காசு எதுவும் இல்லை.. வேலைக்கு சேர்ந்து கொஞ்சநாள்தான் ஆகிறது.. பணம் வந்ததும் தருகிறேன்" என்று சொல்லி உள்ளார்.. அதற்கு அந்த பெண், "நாம் இருவரும் நைட் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்துவிட்டேன்.. நீ பணம் தராவிட்டால், உன் குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவேன்" என்று மிரட்டி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்து போன ரிஷி, அந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.. இதுவே தகராறாக உருவெடுத்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த ரிஷி, அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியதுமே, அவர் மயங்கி விழுந்துள்ளார்..

ஃபேன் + லைட்

ஃபேன் + லைட்

உடனே அவர் அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தில் இறுக்கி கொன்றுள்ளார்.. பிறகு, சடலத்தை வீட்டில் உள்ள தண்ணீர் டிரம்மில் வைத்து மூடிவிட்டு தப்பியுள்ளார்... துர்நாற்றம் எதுவும் வந்துவிடாமல் இருப்பதற்காக, பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் வேறு சில பொருட்களை எல்லாம் அந்த டிரம்மில் போட்டு திணித்துள்ளார்.. இந்த பதற்றத்தில் வீட்டில் உள்ள லைட், ஃபேன் எதையும் அணைக்காமல், பின்பக்க கதவின் வழியாக வெளியே வந்து, முன்பக்கம் உள்ள கதவை பூட்டிக்கொண்டு சென்றுள்ளார்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து ரிஷியை கைது செய்தனர்..

அட்ரஸ் எங்கே?

அட்ரஸ் எங்கே?

இதனிடையே கைதான ரிஷியிடம் விசாரணை நடத்தியபோது, கொலை செய்த அந்த பெண் யார் என்று போலீசார் கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு ரிஷி, "அந்த பெண் யாரென்று தெரியல்லை. அன்றுதான் பஸ் ஸ்டாண்டில் அறிமுகம் ஆனார்.. ஆனால் பெற்றோர் யாரும் அவருக்கு கிடையாது.. உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக என்னிடம் சொன்னார்" என்றார்.. இதையடுத்து, பெண்ணின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, இறந்துபோன பெண்ணின் பெயர் விவரங்கள், அவரது உறவினர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ரிஷியிடமும் விசாரணை நடக்கிறது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+