ராம் சரண்- உபாசனா மகளுக்கு தங்க தொட்டிலை பரிசளித்தாரா முகேஷ் அம்பானி.. விலை ரூ 1 கோடியாமே
ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் ராம் சரண்- உபாசனா தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இந்தியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானி தங்க தொட்டில் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண். இவருக்கம் அப்பல்லோ நிர்வாக இயக்குநர் பிரீத்தா ரெட்டியின் மகள் உபாசனாவுக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் உபாசனா கர்ப்பமடைந்தார். இவர்கள் ஐவிஎஃப் முறையில் கரு உருவானதாக தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் உபாசனாவுக்கு ஜூன் 20ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதற்காக ரசிகர்கள் பலர் ராம்சரண் தம்பதிக்கும் தாத்தாவான சிரஞ்சீவிக்கும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.

ஏற்கெனவே மகள் வயிற்று பேரனுடன் விளையாடி வரும் நிலையில் தற்போது மகன் சார்பாக பேத்தி பிறந்துவிட்டாள். இனி சிரஞ்சீவிக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை பிறந்த பின்னர் சிரஞ்சீவி கூறுகையில் ராம்சரண் , உபாசனாவை பெற்றோர்களாக காண நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தோம். எங்கள் வேண்டுதல் பல ஆண்டுகளுக்கு பிறகு இறைவன் நிறைவேற்றி இருக்கிறார். ராம் சரண் தந்தையானதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
குழந்தை பிறப்பதற்கு முன்பே நல்ல அறிகுறிகள் தென்பட்டது. குழந்தையின் ராசி தான் ராம் சரண் அவரது தொழிலில் நல்ல வளர்ச்சியடைய காரணம் என சிரஞ்சீவி கூறினார். மேலும் தங்கள் குடும்பமே ஆஞ்சநேய பக்தர்கள். எங்கள் பேத்தியும் அவருக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை பிறந்துவிட்டார்.
தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என்றார். குழந்தையும் உபாசனாவும் ஜூன் 23 ஆம் தேதி வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆனார்கள். இந்த நிலையில் ராம் சரணின் மகளுக்கு பெயர் சூட்டு விழா உபாசனாவின் தாய் வீட்டில் நடந்தது. இந்த விழாவில் இந்திய சமூக சேவகர் சுனிதா கிருஷ்ணன் கைகளால் செய்யப்பட்ட தொட்டிலை பரிசாக கொடுத்தார்.
அது போல் பாடகர் கலா பைரவாவின் இசையில் அமைந்த நாட்டு நாட்டு பாடல் இசை வாசிக்கப்பட்டது. இத்துடன் சேர்த்து முகேஷ் அம்பானி குடும்பத்தினர் ராம் சரணின் மகளுக்கு தங்க தொட்டிலை பரிசாக கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுளளன. இந்த தொட்டில் ராம் சரணுக்கு குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாள் கொடுக்கப்பட்டதாம். அந்த தொட்டில் ரூ 1 கோடி மதிப்புடையது என கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications