கட்டிலுக்கு அடியில்.. நீ பத்தினியா.. ஊருக்கு நடுவில் நடந்த "அக்னி பரீட்சை".. போலீசுக்கு ஓடிய "அண்ணி"
அண்ணியுடன் தகாத உறவு உள்ளதாக கூறி, தம்பிக்கு நூதனமான தண்டனையை தந்துள்ளார் அண்ணன்
ஹைதராபாத்: நமக்கு "கல்வி" மட்டும் கிடைத்துவிட்டால், எல்லாமே இங்கு சரியாகிவிடும் என்று நாம் வலுவாக நம்பிக் கொண்டிருந்தால், நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்த்தால் இதயமே பதறிப்போய்விடுகிறது.. அப்படித்தான் ஒரு அதிர்ச்சி சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.
2 வருடங்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த பெண்ணின் பெயர் சுமனி.. இவரது கணவர் பெயர் ஜெய்வீர்.. கல்யாணம் ஆகி 6 மாசம்தான் ஆகியிருந்தது.
ஆனாலும் வரதட்சணை கொடுமைக்கு அளவுக்கு அதிகமாகவே ஆளானார் சுமனி.. மாமியார் + கணவன் இருவருமே அந்த பெண்ணை கொடூரமாக டார்ச்சர் செய்தார்கள்.

மருமகள்
அதாவது மாமியாருக்கு கோபம் வரும்போதெல்லாம் சுமனி கையை இழுத்து பிடித்து கத்தியை பிடித்து கிழித்து விடுவாராம்.. கணவனும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.. இதனால், உடம்பெங்கும் அந்த பெண்ணுக்கு காயங்கள், வடுக்கள், தழும்புகள் கிடந்தன. ஏற்கனவே சுமனிக்கு உடம்பெல்லாம் காயங்கள் இருந்த நிலையில், கைகளில் உள்ள காயங்களை மட்டும் மறைக்க முடியவில்லை.. ஒருவேளை யாராவது, கைகளில் என்ன இவ்வளவு காயங்கள் என்று மருமகளை கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று மாமியார் யோசித்து, இதற்காகவே ஒரு மந்திரவாதியை சந்தித்து ஐடியா கேட்டு வந்தார்.

நெருப்பில் கை
அதன்படி, சம்பந்தமே இல்லாமல் சுமனி மீது நடத்தை சரியில்லை என்று பழியை சுமத்தினார். பிறகு, வீட்டுக்கு நடுவில் விறகு கட்டைகளை எல்லாம் குவியலாக போட்டு தீயிட்டு கொளுத்தினார். சுமனியிடம், "நீ பத்தினியா? நீ பத்தினி என்பது உண்மைன்னா இந்த நெருப்பில கையை விடு பார்க்கலாம்" என்றார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுமனி மறுத்துள்ளார். இதனால் மாமியாருக்கு கோபம்தான் அதிகமானது. நெருப்பில் கையை விட்டுவிட்டால், சுமனி கை முழுவதும் வெந்துவிடும், ஏற்கனவே இருக்கும் காயங்களும் அதனுடன் சேர்ந்து மறைந்துவிடும் என்று போட்ட பிளான் எல்லாம் வீணாகிறதே என்று ஆத்திரம் அடைந்தார்.

கட்டிலுக்கு அடியில்
அப்படின்னா, நீ பத்தினி இல்லை? என்று ஆவேசமாக கத்தினார். இதனால் பொறுமையிழந்த சுமனி, போலீசுக்கு சென்று மாமியார், கணவர் மீது புகார் தந்தார்.. அதுகுறித்த விசாரணையும் நடந்தது.. அதுபோலவே, நம்முடைய கன்னியாகுமரி மாவட்டத்திலும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது ஞானபாக்கியபாய்.. இவர் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் தற்காலிகப் பணியாளராக பணிபுரிந்து வந்தவர்.. இவரது கணவர் செந்தில், சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.. காதலித்து 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள் 2 குழந்தைகளும் உள்ளனர்.

கட்டிலுக்கு கீழே
செந்தில், ஞானபாக்கியபாய் இருவருமே வேலைக்கு சென்றுவிடுவதால், இரவு நேரத்தில்தான் வீடியோ காலில் பேசுவது வழக்கம்.. ஆனால், மனைவி மீது செந்திலுக்கு அடிக்கடி சந்தேகம் வருமாம்.. இது தொடர்பாகவே இருவருக்குள்ளும் நிறைய முறை தகராறு வந்துள்ளது.. சம்பவத்தன்று வீடியோ காலில் பேசும்போது, குழந்தைகள் தூங்கிவிட்டிருந்தனர்.. அப்போது மனைவியின் பின்னால் யாரோ மறைந்திருப்பதாக செந்திலுக்கு சந்தேகம் வந்துள்ளது.. அதனால், வீடியோ கேமரா, பெட்ரூம் முழுக்க தெரியுமாறு சுற்றிலும் காண்பிக்க சொல்லி உள்ளார்.. குறுக்கே நுழைவது யார்? நீ பத்தினியா? பத்தினி என்பதை நிரூபித்து காட்டு என்றெல்லாம் கேட்டுள்ளார்.

ஸ்லிப் கால்
கட்டிலுக்கு அடியில் யாருமே இல்லை, பாருங்க என்று வீடியோவை முழுக்க காட்டினாராம் மனைவி.. அப்போதும் செந்தில் நம்பாததால், போனை கீழே போட்டுவிட்டு ஞானபாக்கியபாய் கதறி அழுததுடன், வீடியோ காலில் கணவன் இருக்கும்போதே தூக்கு போட்டு தற்கொலையும் செய்து கொண்டார். விளையாட்டுக்கு தூக்கு போடப்போய் கால் ஸ்லிப் ஆகிவிட்டது என்றார்கள்.. பண தகராறால் தற்கொலை என்றார்கள்.. சந்தேகம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்றார்கள்.. இப்படி பல சந்தேகங்கள் எழுந்தாலும், துடிதுடித்து இறந்த ஞானபாக்கியபாய் மரணம் மிகப்பெரிய பாதிப்பை குமரியில் ஏற்படுத்தியது.

அண்ணி அண்ணி
இதோ தெலுங்கானாவிலும் ஒரு கொடூரம் இப்போது நடந்துள்ளது.. அங்குள்ள நபர் ஒருவர், தன்னுடைய தம்பிக்கு, தன்னுடைய மனைவியுடன் தகாத உறவு இருக்கிறது என்று சந்தேகப்பட்டார்.. இதை கேள்விப்பட்ட அந்த தம்பியோ, "அவங்க எனக்கு அண்ணி.. அப்படியெல்லாம் கள்ளத்தொடர்பு எதுவும் இல்லை" என்று கதறி அழுதுள்ளார்.. ஆனால், அந்த அண்ணன் அதை நம்பவில்லை.. அதனால், தன்னுடைய தம்பி மீது கிராம பஞ்சாயத்தாரிடம் புகார் தந்தார்.. உடனே அந்த ஊர் பெரியவர்களும், இந்த விவகாரத்தை அக்னி பரீட்சை செய்து நிரூபிக்க வேண்டும் என்று தீர்ப்பு தந்தார்கள்.

பழுத்த கம்பி
இதற்காக ஊருக்கு நடுவில் தீ மூட்டப்பட்டது.. அந்த தீயில், பெரிய இரும்புக் கம்பி ஒன்றை போட்டனர்.. நெருப்பில் கிடந்து சூடான அந்த கம்பியை, வெறும் கைகளால் எடுத்து அகற்ற வேண்டும் என்று பஞ்சாயத்துதாரர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள்.. அக்னி பரீட்சையைச் செய்தவருக்கு கையில் தீக்காயம் ஏற்படாவிட்டால் அவர் குற்றம் செய்திருக்க மாட்டார், ஒருவேளை கையில் தீக்காயம் ஏற்பட்டால் அவர் அண்ணியுடன் தவறு செய்தவர் என்று அர்த்தமாம்.. இதனால் அதிர்ந்து போன அந்த தம்பி, என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துள்ளார்.. பிறகு, பழுக்க காய்ச்சப்பட்ட கம்பியை வெற்று கைகளால் நெருப்பில் இருந்து வெளியே எடுத்து வீசி, அக்னி பரீட்சையையும் செய்துவிட்டார்.

பத்தினியா பத்தினி
அவர் வேகமாக இரும்பு கம்பியை தீயிலிருந்து இழுத்து வெளியே போட்டதால், கையில் அந்த அளவுக்கு தீக்காயம் ஏற்படவில்லை.. இதை பார்த்த அந்த பெரிசுகள், திருப்தி அடையாமல் அவரை தான் செய்த தவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். இவ்வளவையும் பார்த்து சகிக்க முடியாமல் போன அந்த அண்ணி, நேரடியாகவே போலீசுக்கு போய்விட்டார்.. மச்சினன் மீது அபாண்டமாக பழியை போட்ட தன்னுடைய கணவர் மீதும், அவர் தந்த அக்னி பரீட்சை குறித்தும் போலீசில் சொன்னார்.. அக்னி பரீட்சை யெதும், கையில் தீக்காயம் ஒன்றும் ஏற்படவில்லை, அப்படியிருந்தும் அவரை தவறு செய்ததாக ஒப்புக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று புகாரில் கூறினார்..

ஹைலைட்ஸ்
இதையடுத்து, போலீசார் இது தொடர்பான விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. கடந்த வாரம் அதாவது பிப்ரவரி 25ம்தேதிதான், இந்த அக்னி பரீட்சை நடந்திருக்கிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், குடும்பத்தில் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காகவும், அக்னிப்ரீட்சை தீர்ப்பை வழங்குவதற்காகவும், அந்த பஞ்சாயத்து பெரியவர்கள், ரூ.11 லட்சம் தொகையை இந்த பெண்ணின் கணவரிடம் வாங்கி கொண்டார்களாம்.. உடன்பிறந்த தம்பியையும், தாலிகட்டின மனைவியையும் அபாண்டமாக சந்தேகப்பட்ட அந்த அண்ணன்தான் இதுக்கெல்லாம் காரணம்.. ஆனால், அவர் என்ன படித்திருக்கிறார் என்று தெரியவில்லை.. விசாரணை நடக்கிறது..!!

பழுத்த கம்பி
பொதுவாக இதுபோன்ற குற்றசாட்டுக்களில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.. அதிலும் கள்ளக்காதல் என்றாலும்கூட, சரிபாதி சம்பந்தப்பட்ட ஆண்களைவிட, பெண்கள் மீதே குற்றம் சுமத்தப்படும்.. பெண்களுக்கே பிரதான தண்டனைகள் தரப்படும்.. ஆனால், இந்த பிரச்சனையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க கைகள் பழுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்... அப்படி செய்யும்போது கைகளில் காயம் ஏற்படக் கூடாது, காயம் பட்டால், அவர் தவறு செய்தவர் என்பதை குறிக்கிறது என்று பஞ்சாயத்தார் தீர்ப்பு இங்கு எப்போதுமே இருந்து வருகிறதாம். இரும்பு கம்பியை தூக்கி வீசியபிறகும், தீக்காயம் எற்படவில்லை என்றாலும், புகார் அளித்தவர் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளார்.. இதையடுத்துதான், இதெல்லாம் சகிக்க முடியாமல், அவரின் மனைவில் போலீசுக்கு சென்று புகார் அளித்துள்ளார். இந்த நவீன நூற்றாண்டிலும், அக்னி பரீட்சையா என்று மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications