தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மாஜி நக்சல் சீதாக்கா சொத்து எவ்வளவு? எத்தனை கிரிமினல் கேஸ்?
ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியும் அவருடன் 11 அமைச்சர்களும் நேற்று பதவியேற்றனர். ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் மாஜி நக்சலைட் சீதாக்காவும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 69 இடங்களில் வென்று பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா முதல்வர் வேட்பாளராக ரேவந்த் ரெட்டி ஏற்கனவே முன்னிறுத்தப்பட்டிருந்தார். இருந்த போதும் தெலுங்கானா முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர்களிடையே போட்டி இருந்தது. ஒருவழியாக ரேவந்த் ரெட்டி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

ஹைதராபாத் எல்.பி. ஸ்டேடியத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்று திரள ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு செய்து வைத்தார். ரேவந்த் ரெட்டியுடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் மாஜி நக்சலைட்டான சீதாக்காவும் அமைச்சரானார். அவருக்கு பழங்குடிகள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
11 கோடீஸ்வர அமைச்சர்கள்: தெலுங்கானாவில் அமைச்சராக பதவியேற்றவர்களில் மிக குறைவான சொத்து வைத்திருப்பவர் அமைச்சர் சீதாக்காதான். அவருக்கு ரூ82 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மட்டும் உள்ளன. அமைச்சர் ஶ்ரீனிவாச ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ433 கோடி. இவர்தான் தெலுங்கானா அமைச்சர்களில் அதிக சொத்துகளை வைத்திருப்பவர். முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு ரூ 30,04,98,852 கோடி; துணை முதல்வர் பாட்டி விக்ரமார்காவுக்கு ரூ8,13,26,605 கோடி சொத்துகள். அமைச்சர் ஶ்ரீனிவாச ரெட்டியின் மொத்த சொத்து மதிப்பு ரூ4,33,93,34,880 கோடி. ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் சீதாக்காவை தவிர அனைவருமே கோடீஸ்வரர்கள்தான்.
89 கேஸ்கள்: முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது மொத்தம் 89 கிரிமினல் கேஸ்கள் நிலுவையில் உள்ளன. இதில் ஐபிசி 506-ன் கீழ் 34 வழக்குகளும் ஐபிசி 504-ன் கீழ் 38 வழக்குகளும் பதிவாகி உள்ளன. ஐபிசி 153-ன் கீழ் 21 வழக்குகள் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications