"ரெட்டைவால் குருவி".. இந்த பக்கம் விமலா.. அந்த பக்கம் நித்யஸ்ரீ.. சிக்கிய "மச்சக்காரன்".. ஹய்யயோ

2வது திருமணம் செய்த ஆந்திரா கல்யாண் தலைமறைவாகி விட்டாராம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: 2 கல்யாணம் செய்த கல்யாண், வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார் இல்லையா.. அதற்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கல்யாண்.. டிக் டாக்கில் இவர் ரொம்ப ஃபேமஸ் ஆனவர்.. அடிக்கடி வீடியோக்கள் எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு வருகிறார்.

இவரது மனைவி பெயர் விமலா.. கடப்பாவை சேர்ந்தவர்.. டிக்டாக் வீடியோ எடுக்கும்போது, விமலாவுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணுக்கு பழக்கம் ஏற்பட்டது.

 ஃபாலோயர்ஸ்கள்

ஃபாலோயர்ஸ்கள்

அது காதலாக கனிந்து கல்யாணத்தில் வந்து முடிந்தது.. அதற்கு பிறகு இவர்கள் 2 பேரும் ஜோடியாகவே டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.. அதனால், இவர்களுக்கு ஃபாலோயர்ஸ்கள் மிக அதிகமாக உள்ளனர்.. இந்நிலையில், நித்யஸ்ரீ என்பவர் விமலாவை சந்தித்து பேசியுள்ளார்.. நித்யஸ்ரீ, கல்யாணின் முன்னாள் காதலி.. கல்யாணுடன் சேர்ந்து நிறைய வீடியோ பதிவிட்டுள்ளார்.. இருவரும் காதலித்துள்ளனர்.. அந்த காதலில் விரிசல் வந்துவிடவும் ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்துவிட்டனர்.. அதற்கு பிறகு கல்யாண் விமலாவை திருமணம் செய்துள்ளார்..

 பெரிய சத்தியம்

பெரிய சத்தியம்

ஆனால், இது தெரிந்தும், மீண்டும் கல்யாணை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று விமலாவிடம் கெஞ்சியுள்ளார் நித்யஸ்ரீ. இதையடுத்து விமலா, நித்யஸ்ரீயை கணவனுக்கு திருமணம் செய்ய முன்வந்தார்.. கணவரையும் சம்மதிக்க வைத்ததுடன், ஒரே ஒரு சத்தியம் வாங்கி கொண்டார்.. 2வது திருமணம் செய்துகொண்ட பிறகும், 3 பேரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்றாராம்.. அதன்படி கல்யாண் சத்தியம் செய்ய, திருப்பதியில் திருமணம் நடந்தது..

 3 பேரும் மிஸ்ஸிங்

3 பேரும் மிஸ்ஸிங்

இந்த கல்யாணத்துக்கு விமலா தலைமை தாங்கினார். புதுமண தம்பதியுடன் விமலாவும் சேர்ந்து போட்டோவும் எடுத்துக்கொண்டார். இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலானது.. அதேசமயம், இந்த கல்யாணம் முடிந்து 3 பேரும் திடீரென காணாமல் போய்விட்டார்களாம்.. இவர்களை பேட்டி எடுக்க நிறைய மீடியாவில் தேடியிருக்கிறார்கள். ஆனால், எங்கே போனார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆக இருந்தது.. தற்போது, நேற்று முன்தினம் கல்யாண் வீட்டை விட்டே ஓடிவிட்டார் என்ற தகவல் வெளியானது.. இரண்டு மனைவிகளின் தொந்தரவு தாங்க முடியாமல், கல்யாண் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது..

 டபுள் கல்யாணம்

டபுள் கல்யாணம்

இதற்கு காரணமும் தற்போது வெளியாகி உள்ளது.. முதல் மனைவி விமலா ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் ஆனவராம்.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. இது அந்த ஊர் பஞ்சாயத்து உட்பட அனைவருக்குமே தெரியும் என்கிறார்கள்.. ஊர் பஞ்சாயத்துக்கு கட்டப்பட்டுத்தான், விமலா, தன்னுடைய கணவருக்கு 2வது திருமணத்தையே செய்து வைத்துள்ளார்.. இப்போது விஷயம் என்னவென்றால் 3 பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கல்யாணிடம் சத்தியம் வாங்கியிருந்த நிலையில், சிக்கலே அந்த சத்தியத்தில்தான் வந்துள்ளது..

 கிரேட் எஸ்கேப்

கிரேட் எஸ்கேப்

நித்யஸ்ரீக்கும் விமலாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.. பிரச்சனையை ஆரம்பித்ததே நித்யஸ்ரீதானாம்.. விமலாவை அவரது முதல் கணவனுடன் அனுப்பி வையுங்கள் என்று கல்யாணை இவர் நச்சரித்துள்ளார்.. அதற்கு விமலா, அதெப்படி? 3 பேரும் ஒரே வீட்டில் குடித்தனம் செய்ய வேண்டும் என்று சத்தியம் செய்தாகிவிட்டதே என்று பதிலுக்கு மல்லுக்கட்டினாராம்.. விமலாவும், நித்யஸ்ரீயும், ஆளுக்கு ஒரு பக்கம் கல்யாணிடம் இது தொடர்பாக சண்டை போட்டதாக தெரிகிறது.. இவர்கள் 2 பேரையும் சமாளிக்க முடியாமல், "இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு வெளியே போனவர்தானாம்.. இன்னும் வீட்டுக்கு வரவேயில்லையாம்.. இப்போது 2 பெண்களும் சேர்ந்து, கல்யாணை வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+