விளம்பரத்தால் தலைவலி! கர்நாடக காங். அரசிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..நடந்தது இதுதான்
ஐதராபாத்: தெலுங்கானாவில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் கர்நாடக காங்கிரஸ் அரசு பத்திரிகையில் விளம்பரம் போட்டுள்ளதால், இது தேர்தல் நடத்தை விதி எனவும் ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தெலுங்கானாவில் வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு தினங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் அங்கு தேர்தல் களம் அனல் பறக்கிறது. இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தெலுங்கானாவில் மும்முனை போட்டி நிலவுகிறது.

எனினும், ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி மற்றும் காங்கிரஸ் இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை மூன்றாவது முறையாக பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய சந்திரசேகர் ராவ் கட்சியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு தேர்தல் நடத்தை விதி மீறல் அமலில் உள்ளது.
இந்த நிலையில், தெலுங்கானா மாநில பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், கர்நாடக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதி மீறல் என்று பாஜகவும், ஆளும் கட்சியான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன.
இந்த புகாரை ஏற்று கர்நாடக அரசின் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பி விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசின் முதன்மை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் விளக்கமும் கேட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் இந்த விளக்கத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
முன்னதாக தெலுங்கனாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த அனுமதி கொடுத்த தேர்தல் ஆணையம், திடீரென ரிது பந்து திட்டத்தின் கீழ் நிதி உதவியை அளிக்கும் திட்டத்தை நிறுத்திவைக்க அறிவுறுத்தியது. இந்தத் திட்டம் குறித்து அமைச்சர் அறிக்கை வெளியிட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் மீறிப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்தது.
தெலங்கானாவில் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு "ரிது பந்து" திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ராபி பருவத்துக்கு ரூ.5,000 பணம் வழங்கப்பட்டடு வருகிறது. நடப்பு ஆண்டில் அக்டோபர் - ஜனவரி பருவத்துக்கான தொகையினை வழங்குவதற்கு தெலங்கானா அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இருந்த போதிலும் தேர்தல் நடத்தை விதி நடைமுறைக்கு வந்த பிறகு இது குறித்து விளம்பரப்படுத்த வேண்டாம் என்று அரசிடம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த விதி முறை மீறப்பட்டு இருப்பதாக கூறி தற்போது நிறுத்தி வைத்துள்ளது.
-
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications