"எக்ஸ்" செய்த விபரீத செயல்.. தெலங்கானாவில் பொறியியல் மாணவி தற்கொலை.. அதிர வைக்கும் பின்னணி
கடந்த சில மாதங்களாக தான் காதலித்து வந்த மாணவருடன் சுசித்ரா பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்துள்ளார். மேலும், தனது சீனியர் மாணவர் ஒருவருடன் மாணவி சுசித்ரா அடிக்கடி சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஹைதராபாத்: தனது முன்னாள் காதலன் செய்த விபரீத செயலால் தெலங்கானாவில் பொறியியல் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ராகிங் கொடுமையால் தெலங்கானாவில் ஒரு மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சூழலில், அடுத்து ஒரு சோக சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இதனிடையே, மாணவியின் தற்கொலைக்கு காரணமான அவரது முன்னாள் காதலன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜூனியர் மாணவருடன் காதல்
தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் சுசித்ரா (22). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கும், அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் காதிலிக்க தொடங்கினர். இதனால் அந்த மாணவருடன் சுசித்ரா நெருங்கி பழகியுள்ளார்.

சீனியர் மாணவருடன் பழக்கம்
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தான் காதலித்து வந்த மாணவருடன் சுசித்ரா பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்துள்ளார். மேலும், தனது சீனியர் மாணவர் ஒருவருடன் மாணவி சுசித்ரா அடிக்கடி சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர்கள் இவ்வாறு பேசி பழகுவது மாணவியின் முன்னாள் காதலனான இரண்டாம் ஆண்டு மாணவனுக்கு பிடிக்கவில்லை.

அந்தரங்க புகைப்படங்கள்
இதனால் சுசித்ராவை பழிவாங்க முடிவு செய்த அந்த மாணவன், தன்னுடன் சுசித்ரா நெருக்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் கல்லூரியில் உள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு வாட்ஸ் அப்பில் சில தினங்களுக்கு முன்பு அனுப்பினார். இந்த விஷயம் மாணவி சுசித்ராவுக்கு தெரியவந்ததால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார். மேலும், அவர் கடும் மன உளைச்சலிலும் இருந்து வந்துள்ளார்.

போலீஸ் வழக்கு பதிவு
இந்த சூழலில், நேற்று இரவு தனது வீட்டில் மாணவி சுசித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில், மாணவியின் கல்லூரிக்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மேற்கூறிய விஷயங்கள் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, சுசித்ராவின் அந்தரங்க புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்பிய மாணவன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications