ஆந்திராவில் ஓடும் ரயிலில் தீ விபத்து.. நள்ளிரவில் அலறிய பயணிகள்.. உடல் கருகி ஒருவர் பலி
விஜயவாடா: ஆந்திராவில் ஓடும் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் டாடாநகரில் இருந்து எர்ணாகுளம் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திரா அருகே வந்த போது ரயிலின் 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். ரயிலின் பி1 மற்றும் எம் 2 பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக அந்த இரு பெட்டிகளும் கழற்றிவிடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் டாடா நகரில் இருந்து எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஆந்திராவின் எலமஞ்சிலி அருகே சென்ற போது ரயிலின் 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவில் தீ விபத்து
நள்ளிரவு 12.45 மணியளவில் ரயிலின் பி1, எம் 2 ஆகிய இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பெட்டிகளிலும் தலா 82 மற்றும் 76 பயணிகள் பயணித்துள்ளனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் திடுக்கிட்டு எழுந்து அபயக்குரல் எழுப்பினர்.
உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் ஒருவர் மட்டும் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பி 1 பெட்டியில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகரிகள் கூறினர்.
பயணிகள் அவதி
இந்த விபத்து காரணமாக அந்த வழியாக செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், விஜயவாடா செல்லும் ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
உடனே கழற்றிவிடப்பட்ட பெட்டிகள்
ரயில் தீ விபத்தில் சிக்கி பலியான பயணியின் அடையாளம் தெரியவந்துள்ளது. சந்திரசேகர் சுந்தரம் அவரது பெயர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து அதிகரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எர்ணாகுளம் நோக்கி ரயில் வந்து கொண்டு இருந்த போது இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.
இரண்டு பெட்டிகளும் உடனே கழற்றிவிடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ பிடித்த இரண்டு பெட்டிகளிலும் பயணித்த பயணிகள் மாற்று ஏற்பாடு மூலம் எர்ணாகுளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். ரயில்வே ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது.
ஹெல்ப்லைன் எண்கள்:
எலமஞ்சிலி - 7815909386
அனகப்பள்ளி - 7569305669
துனி - 7815909479
சமல்கோட் - 7382629990
ராஜமுந்திரி - 088 - 32420541, 088 - 32420543
ஏலூர் - 7569305268
விஜயவாடா - 0866 - 2575167
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications