• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உடலுறவு".. ஆசை ஆசையாய் காத்திருந்த மணமகன்.. ரூமில் நுழைந்ததுமே கல்யாண பொண்ணு தந்த ஷாக்.. ஒரே ஓட்டம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: முதலிரவிலேயே அதிர்ச்சி தந்த மணமகளால், மாப்பிள்ளை நிலைகுலைந்து விட்டார்.. இப்போது புதுமண தம்பதி இருவருமே மாறி மாறி குற்றச்சாட்டை வீசி, குண்டூரையே அலற வைத்துள்ளனர்.

Recommended Video

  Nagai-யில் ஒரு சைக்கோ மாப்பிள்ளை | Telangana-வில் திருமணம் ஆன 1 நாளில் கர்ப்பம் ஆன பெண்

  ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் சீனிவாசராவ்.. பி.டெக் படித்துள்ளார்.. மோட்டோ கண்ட்ரோலர் ஆக வேலை பார்த்து வருகிறார்.

  இவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்.. இவரது அப்பா வருவாய் துறையில் பணியாற்றி ரிடையர் ஆனவர்.. சீனிவாசராவ் ஒரே மகனும்கூட.

  சேலத்தில் பகீர்.. குடும்பத்திற்கே தெரியாத 8 மாத கர்ப்பம்! காட்டில் பிரசவ வலி! தாயும் குழந்தையும் பலிசேலத்தில் பகீர்.. குடும்பத்திற்கே தெரியாத 8 மாத கர்ப்பம்! காட்டில் பிரசவ வலி! தாயும் குழந்தையும் பலி

   செல்ல மகன்

  செல்ல மகன்

  அதனால், தங்களின் ஒரே செல்ல மகனின் திருமணத்தை தடபுடலாக நடத்த பெற்றோர் திட்டமிட்டனர்.. அதன்படி, அதே மாவட்டத்தை சேர்ந்த பிரியா என்பவரை பெண் பார்த்து பேசி முடித்தனர்.. பிரியாவின் அம்மா, ஸ்ரீலட்சுமி வருவாய் துறை அதிகாரியாக உள்ளார்.. மணமக்களின் விருப்பத்தின்பேரில், இரு குடும்பத்தினரும் திருமணத்தை தடபுடலாக செய்தனர்..

  பிரியா

  பிரியா

  இதில், சீனிவாசராவ் எந்தவிதமான வரதட்சனையும் வாங்காமல் பிரியாவை கல்யாணம் செய்து கொண்டார்... திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தை பார்த்து அந்த ஊரே மிரண்டுவிட்டது.. இந்நிலையில், சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.. "கல்யாணத்துக்கு முன்பேயே, அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறாள்.. ரிசப்ஷன் முடிந்த கையோடு, மகளை தங்களுடன் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார் அவரது அம்மா ஸ்ரீலட்சுமி.. எங்களுக்கு முதலிரவுகூட நடக்கவில்லை.. பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து குண்டூரில் எங்களுக்கு வீடு வாடகை பார்த்து குடி வைத்தனர்.

  முதலிரவு

  முதலிரவு

  அந்த வீட்டில் ஒரே ஒரு நாள் மட்டும் என் மனைவி தங்கினார்.. மறுநாளே, அம்மா வீட்டிற்கு போய் வருகிறேன் என்று சொல்லி கிளம்பி விட்டார். எப்படி என் மனைவி கர்ப்பமானார்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.. ஆனால், மணமகள் பிரியா வேறு ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். "சீனிவாச ராவ் என்னை கடுமையாக தாக்கி வரதட்சணை கொடுமை செய்துவிட்டார்.. 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கேட்டார்கள்.. நான் ஏற்கனவே வேறு ஒருவருடன் நிச்சயம் ஆனவள்.. இது என் கணவருக்கும் தெரியும்" என்று புகார் கூறியுள்ளார்.

  கர்ப்பம்

  கர்ப்பம்

  இந்த இரு தரப்பு புகார்களையும் கேட்டு போலீஸையே கிறுகிறுத்து போய்விட்டனர்.. கடந்த ஆண்டு ஸ்ரீலட்சுமி விஆர்ஓவாக பணியாற்றியபோது, அதே கிராமத்தில் உள்ள விமானப்படை ஊழியரை, தன்னுடை மகளுக்கு வரனாக பார்த்துள்ளார்.. பிரியாவுக்கு அவருடன் நிச்சயதார்த்தமும் செய்ததாக தெரிகிறது... ஆனால் நிச்சயித்தபடி கல்யாணம் மட்டும் நடைபெறவில்லையாம்.. இந்த விஷயம், திருமணத்துக்கு பிறகுதான் தனக்கு தெரிந்தது என்று சீனிவாசன் புலம்புகிறார்..

  முதலிரவு

  முதலிரவு

  "எல்லாரும் சேர்ந்து என்னிடம் மறைத்துவிட்டனர்.. வேறு ஒருவருடன் ஏற்கனவே குடும்பம் நடத்தி வந்துள்ளார் அந்த பெண்.. என்னை இப்படி ஏமாற்றிவிட்டார்களே.. இதில் பண மோசடி வேறு சொல்கிறார்கள்.. நான் வரதட்சணையாக 10 பைசாகூட வாங்கவில்லை.. 10 லட்சம் கேட்டேன் என்கிறார்கள்.. அதற்கு ஆதாரம் இருக்கிறதா? அம்மா - மகள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சீனிவாசன் புலம்புகிறார்.. தற்போது இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருவதாக தெரிகிறது.. இருந்தாலும், நிச்சயம் மட்டுமே ஆனவர், எப்படி கர்ப்பம் ஆனார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறதாம்.

   சுகாசினி

  சுகாசினி

  இப்படித்தான் சித்தூரில் 2 நாளைக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. சுகாசினி என்ற பெண், சுனில் என்ற இளைஞரை காதலித்துள்ளார்.. தான் ஆதரவற்றவர் என்று சொல்லி, சுனிலை திருமணம் செய்துள்ளார் சுகாசினி.. மருமகளுக்கு 3 பவுன் நகையும் சுனில் வீட்டில் வாங்கி தந்துள்ளனர்.. தன்னுடைய மாமாவுக்கு சிகிச்சைக்கு தர வேண்டும் என்று சொல்லி, 6 லட்சம் வரை சுனிலிடம் பணம் வாங்கியுள்ளார் சுகாசினி... 6 லட்சம் வாங்கி கொண்டபிறகு, சுகாசினியை காணவில்லை.. அப்போதுதான் சுகாசினியை தேட ஆரம்பித்தனர்.. இறுதியில்தான் தெரிந்தது, சுகாசினிக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.. இப்போது இந்த மாப்பிள்ளையும், புகாருடன் போலீசுக்கு போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

  English summary
  first night issue and the day after the marriage the wife became pregnant, what happened in guntur முதலிரவு கூட நடக்கவில்லை, அதற்குள் மனைவி கர்ப்பம் என்று புலம்புகிறார் மாப்பிள்ளை
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X