கேபினட் அமைச்சராகும் முகமது அசாருதீன்.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுக்கு ‛லக்'
ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அமைச்சராக உள்ளார். தெலுங்கானாவில் அவருக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை மறுநாள் முகமது அசாருதீன் அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி நாளை மறுநாள் (அக்டோபர் 31)ம் தேதி அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது.
புதிய அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பதவியேற்க உள்ளார். அவருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. காங்கிரஸ் மேலிடம் இதனை உறுதி செய்துள்ளது. முகமது அசாருதீன் தற்போது தெலுங்கானாவில் எம்எல்சியாக உள்ளார்.
இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த 2009ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் மொரடாபத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2014ல் ராஜஸ்தான் மாநிலம் டோங்க் சாவாய் மத்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு 2018 ல் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக செயல்பட்டார். 2023ல் ஜூபிலி ஹில்ஸ் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
சில்வர் ஜுபிலி சட்டசபை தொகுதியில் அசாருதீன் பிஆர்எஸ் கட்சி வேட்பாளரான மகந்தி கோபிநாத்திடம் 16,337 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தாலும் கூட தற்போது தெலுங்கானாவில் எம்எல்சியாக முகமது அசாருதீன் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆளுநர் இடஒதுக்கீட்டில் முகமது அசாருதீன் எம்எல்சியானார்.
இதற்கிடையே தான் அசாருதீனை சில்வர் ஜுபிலி சட்டசபை தொகுதியில் வீழ்த்தி வெற்றி பெற்ற பிஆர்எஸ் எம்எல்ஏ மகந்தி கோபிநாத் சமீபத்தில் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட அசாருதீன் காங்கிரஸ் மேலிடத்திடம் வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
சில்வர் ஜுபிலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முதல்வர் ரேவந்த் ரெட்டியின் ஆதரவாளராக கருதப்படும் நவீன் யாதவ் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம். இதனால் அசாருதீன் வாய்ப்பு கேட்டார். அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் தான் அசாருதீனை சமாதானம் செய்யும் வகையில் அவருக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும் தற்போது சில்வர் ஜுபிலி தொகுதியில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி காங்கிரஸை விமர்சனம் செய்து ஓட்டு சேகரித்து வருகிறது. காங்கிரஸ் அரசியல் சிறுபான்மையினருக்கு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பிரசாரம் செய்து வருகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு மைனஸாக பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியையே சேர்ந்த அசாருதீனுக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுகிறது. இதன்மூலம் பிஆர்எஸ் கட்சியின் பிரசாரத்தை முறியடிக்கலாம் என்பதோடு அசாருதீனை சில்வர் ஜுபிலி தொகுதி பிரசாரத்தில் இறக்கி ஓட்டுகளை அறுவடை செய்து வெல்லலாம் என்று காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.
அமைச்சராக பொறுப்பேற்க உள்ள அசாருதீனுக்கு சிறுபான்மையினர் நலத்துறையுடன் விளையாட்டு துறை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முகமது அசாருதீன், இந்திய கிரிக்கெட் அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6215 ரன்கள் குவித்துள்ளார். 334 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,378 ரன்களை குவித்துள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications