கட்சியை விட்டு விலகுறேன்.. YSRCP-யில் சேர்ந்த ஒரே வாரத்தில் அதிரடி முடிவு: அம்பத்தி ராயுடு அறிவிப்பு
ஹைதராபாத்: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் அண்மையில் இணைந்த நிலையில், தற்போது அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக முன்பு கூறியிருந்தார் அம்பத்தி ராயுடு. கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு, ஆந்திர அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும், அவர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவி இருந்தன.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி திருப்பதி ராயுடு, கடந்த வாரம், டிசம்பர் 28ஆம் தேதி ஆந்திரா முதலமைச்சர் அலுவலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் நாராயண சுவாமி, எம்.பி பெத்தி ரெட்டி மிதுன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அம்பத்தி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடும் என்ற தகவல் வெளியானது. அம்பத்தி ராயுடு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு, குண்டூர் அல்லது மசூலிப்பட்டிணம் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்தில், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அம்பத்தி ராயுடு. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போவதாகவும் அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 9 நாட்களிலேயே அக்கட்சியில் இருந்து அம்பத்தி ராயுடு விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தி ராயுடு, அரசியல் ரீதியாக அழுத்தங்களை எதிர்கொண்டாரா, வேறு கட்சிகளின் மிரட்டலுக்கு உள்ளானாரா, அல்லது வேறு கட்சியில் இணையப்போகிறாரா என பரபர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications