Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவருடன் கள்ளக்காதலி.. கையும் களவுமாக பிடித்து அசிங்கப்படுத்திய முன்னாள் மிஸ் விசாகப்பட்டினம் அழகி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் உள்ள கள்ளத்தொடர்பை கையும் களவுமாக பிடித்து மீடியாக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் மிஸ் விசாகப்பட்டினம் அழகி.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருமணத்தை மீறிய உறவுகள் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியாத விவகாரமாக இருப்பதால் பஞ்சாயத்து பேசி அனுப்பி வைக்கிறார்கள். பிடிக்காவிட்டால் விவாகரத்து வாங்கி கொண்டு பிரிந்து செல்லுங்கள். சண்டை போட்டு மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள் என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறார்கள்.

Andhra Visakhapatnam

இந்தியாவில் எந்த மாநில போலீசாக இருந்தாலும் கையாளும் சிக்கலான வழக்குகள் என்றால் அது கள்ளக்காதல் விவகாரமாகவே இருக்கும். ஆண் அல்லது பெண்ணுக்கு தனது உறவுடன் ஏதாவது ஒரு வகையில் திருப்தி ஏற்படாமல் போனால், அல்லது கணவர் அல்லது மனைவி மீது வெறுப்பு ஏற்படும் போது, ஆறுதல் என்ற பெயரில் ஏதேனும் உறவு வந்தால் அது கள்ளக்காதலாக மாறுகிறது.

இந்த கள்ளக்காதல் பிரச்சனைக்கு சட்ட ரீதியாக நிவாரணம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் தவிக்கிறார்கள். உடனே விவாகரத்து வாங்க முடியாமலும், சேர்ந்து வாழ முடியாமலும் தவிக்கிறார்கள்.. தமிழ்நாட்டில் இந்த கள்ளக்காதல் காரணமாக நிறைய குற்றங்கள் நடந்துள்ளது.

தமிழ்நாட்டை போல் ஆந்திராவிலும் இது பெரும் பிரச்சனையாக உள்ளது. பிரபலங்களே கள்ளக்காதல் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள். அப்படி ஒரு பிரச்சனையை சந்தித்துள்ளார் முன்னாள் மிஸ் விசாகப்பட்டினம் நக்ஷத்ரா தேஜா. நக்ஷத்ரா தேஜா சாய் தேஜா என்பவரை கடந்த 2013ல் ஒரு திரைப்படத்தில் பணிபுரியும் போது சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே நட்பு அப்போது ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு பின்னாளில் காதலாக மாறி உள்ளது.. இதையடுத்து முன்னாள் மிஸ் அழகியான விசாகப்பட்டினம் நக்ஷத்ரா தேஜாவுக்கும் அவரது காதலர் சாய் தேஜாவுக்கும் இடையே கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் சந்தோஷமான அவரது குடும்பத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால பூகம்பம் ஏற்பட்டது. நக்ஷத்ரா தேஜாவின் கணவர் திரிபுராணா வெங்கட சாய் தேஜாவுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான திருமணத்துக்குப் புறம்பான உறவு ஏற்பட்டுள்ளது. இந்த உறவை ஒரு கட்டத்தில் கண்டுபிடித்த நக்ஷத்ரா தேஜா கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரது கணவர் மறைத்து வந்துள்ளாராம். இதையடுத்து அவரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த நக்ஷத்ரா தேஜா, மீடியாக்களை துணைக்கு அழைத்துக் கொண்டு கணவரின் அறைக்கு சென்றுள்ளார். உள்ளே கணவர் வேறு பெண்ணுடன் இருந்ததை கண்டுபிடித்த அவர், மீடியாக்கள் முன்னிலையில் கையும் களவுமாக பிடித்து அவரை அடித்தார். மேலும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ ஊடகம் ஒன்றில் வெளியாகி பின்னர் சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வேகமாக பரவியது.

இதனிடையே நக்ஷத்ரா என்னையும் என் குடும்ப உறுப்பினர்களையும் பொய்யாகக் குற்றம் சாட்டுகிறார் என்று அவரது கணவர் தேஜா விளக்கம் அளித்துள்ளார். வீடியோவில் உள்ள அந்தப் பெண்ணுடன் தனது அலுவலகத்தில் ஒரு படம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததாகவும், கள்ளக்காதல் இல்லை என்றும் மறுத்துள்ளார்.

ஆந்திர தலைநகரான விசாப்பட்டினம் மாநகரில் உள்ள த்ரீ டவுன் காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்த நிலையில் , போலீசார் விளக்கம் அளித்துள்னர். 2021 ஆம் ஆண்டு முதல் இருவரும் விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது
இப்போது நடந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் புதிய எஃப்ஐஆர் எதையும் பதிவு செய்யவில்லை. இரு தரப்பையும் அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளோம் என்று போலீசார் கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+