காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் விஜயசாந்தி.. தெலுங்கானா தேர்தல் பரபரப்புக்கு இடையே பாஜகவுக்கு டாட்டா!
ஹைதராபாத் :தெலுங்கானா சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில், பிரபல நடிகையும், முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி, மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தெலுங்கானாவில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடி வருகிறார் கேசிஆர். அதேசமயம், காங்கிரஸ் கட்சி பயங்கர டஃப் கொடுத்து வருகிறது. பாஜகவும் தெலுங்கானாவில் காலூன்ற கடுமையாக முயன்று வருகிறது. பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து தேர்தல் பரப்புரை செய்தார். அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் தெலங்கானாவில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

பிஆர்எஸ், தெலுங்கானாவின் 119 இடங்களிலும் போட்டியிடுகிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சியான சிபிஐக்கு ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது. பாஜக 111 இடங்களில் போட்டியிடுகிறது, மீதமுள்ள 8 தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சியான ஜனசேனா கட்சி போட்டியிடுகிறது. அசாதுதீன் ஓவைசியின் AIMIM ஒன்பது இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது, மற்ற இடங்களில் கேசிஆரின் பி.ஆர்.எஸ் கட்சிக்கு ஆதரவை அறிவித்துள்ளது.
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்த நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகியான விஜயசாந்திக்கு இந்த தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு தரவில்லை. மேலும் 5 மாநில சட்டசபை தேர்தலில் பிரச்சாரத்தின் போதும் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே மனக்கசப்பில் இருந்த நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்திற்காக அம்மாநிலத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று வரவேற்றார் விஜயசாந்தி. ஆனால் அப்போதே பிரதமரை வரவேற்கத்தான் இங்கு வந்தேன் என்றும் நிச்சயம் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரவில்லை என்று விஜயசாந்தி கூறியது குறிப்பிடத்தக்கது.
விஜயசாந்தி, கடந்த 1997ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். பாஜகவில் இணைந்து மகளிர் அணி பொதுச்செயலாளர் பதவியையும் வகித்தார். 2005ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய விஜயசாந்தி தனிக் கட்சி தொடங்கினார். 2009ல் சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்து, மேடக் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆனார்.
பின்னர் கேசிஆர் உடனான கருத்து வேறுபாட்டால், 2020ல் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது, பாஜகவில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகியுள்ள அவர், இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications