Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பச்ச உடம்புன்னு கூட பாக்கல.. "உறவு"க்கு பாடாய் படுத்திய புருஷன்.. அதுக்குனு இப்படியா? உறைந்த ஆந்திரா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கட்டின மனைவி என்றும் பாராமல், பிள்ளை பெற்ற பச்ச உடம்புக்காரி என்றும் பாராமல், குறைந்தபட்சம் மனிதாபிமானமும் இல்லாமல், ஈவிரக்கமேயில்லாமல் இந்த கணவர் செய்த காரியத்தை பாருங்களேன்.

தருண் - ஜான்சி இவர்கள்தான் அந்த தம்பதி.. 2 பேருமே உயிருக்கு உயிராக காதலித்து கல்யாணம் செய்துகொண்டவர்கள்.. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

சில வாரங்களுக்கு முன்பு, 2வது குழந்தையும் ஜான்சிக்கு பிறந்துள்ளது.. மகள் பிறந்திருக்கிறாள்.. ஆனால், உடல்நிலை மோசமாகிவிட்டது.. ஏற்கனவே சில கோளாறுகள் உடலில் இருந்ததால், மருத்துவ காரணங்களால் உடல் மேலும் நலிவடைந்துள்ளது..

 Health Issue: Who is this man and husband strangles wife to death for refusing to have sex in hydrabad

பிரசவம்: தருண் டிரைவராக வேலை பார்க்கிறார்.. தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டால், ஜான்சியை உறவுக்கு அழைப்பது இவரது வழக்கம்.. இரவானாலேயே இவரது தொந்தரவு அதிகமாகவும், முடிந்தவரை கணவனை தவிர்த்து வந்திருக்கிறார் ஜான்சி.. ஆனால், பிரசவ பாதிப்பில் இருந்து முழுமையாக வெளிவர முடியாமல் அவதிப்பட்டு வந்த ஜான்சியோ, மறுத்து வந்துள்ளார்.. இதுவே தம்பதிக்கு நடுவில் தகராறை உருவாக்கிவிட்டது..

இப்படித்தான், 10 நாட்களுக்கு முன்பும், வழக்கம்போல மனைவிக்கு படுக்கையில் தொல்லை தந்திருக்கிறார் தருண்.. உடல்நலம் பாதிப்பு காரணமாக, ஜான்சி மறுக்கவும், கணவன் என்ற உரிமையை பயன்படுத்தி தருண் அத்துமீறியிருக்கிறார்... இதனால் ஜான்சி உடல்வலியால் கத்தி சத்தம் போட்டுள்ளார்.. அக்கம்பக்கத்திலேயே வீடுகள் இருந்ததால், அவர்களுக்கு சத்தம் கேட்கக்கூடாது என்பதற்காக, ஜான்சியின் வாயை இறுகப்பொத்த முயன்றார் தருண்.. அப்போது, அவசரத்தில் வாயோடு சேர்த்து மூக்கையும் சேர்த்து அழுத்தியிருக்கிறார்.

 Health Issue: Who is this man and husband strangles wife to death for refusing to have sex in hydrabad

மூச்சு திணறல்: இதில் ஜான்சிக்கு மூச்சு திணறலாகிவிட்டது.. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத தருண், பதறிப்போனார். உடனே, மனைவியை அவசர அவசரமாக பக்கத்திலிருக்கும் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.. மூக்கையும், வாயையும் சேர்த்து பொத்தும்போதே, ஜான்சி உயிர் போய்விட்டதாம்.. சடலமாகவே மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக டாக்டர்கள் சொன்னார்கள்.. இதற்கு பிறகு போலீசுக்கும் தகவல் சொன்னார்கள்..

இதனிடையே, ஜான்சியின் அப்பா போலீசுக்கு போனார்.. தன் மகள் மரணத்தில் மருமகன் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீஸில் புகார் தந்தார்.. ஆனால் தருணோ இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.

"பிரசவம் தொடர்பான உடல்நல பாதிப்பால்தான், மனைவி இறந்துவிட்டார்" என தருண் வாதம் செய்தார்.. இப்படிப்பட்ட சூழலில், ஜான்சியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதில், ஜான்சியின் மரணத்துக்கும், அவரது பிரசவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், மூச்சுத்திணறலில் மட்டுமே இந்த மரணம் நடந்ததாகவும் அந்த ரிப்போர்ட்டில் உறுதியாக கூறப்பட்டிருந்தது.

பரிதாபம்: இதன் அடிப்படையில், போலீஸார் தங்கள் விசாரணையை தருண் மீது தீவிரப்படுத்தினர்.. தங்கள் பாணியில் விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், உடல் பசிக்காக, தன் மனைவியை படுகொலை செய்த விவகாரத்தை தருண் ஒப்புக்கொண்டார்.. இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.. பெற்ற தாயும் இல்லாமல், தந்தையும் இல்லாமல் அந்த 2 குழந்தைகளும் தவித்து கொண்டிருக்கின்றன..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+