Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆண் சகவாசம்".. மருமகளின் "தலையுடன்" ரோட்டில் கூலாக போன மாமியார்.. அதுவும் 6 கிமீ.. அலறிய ஜனங்கள்

மருமகளின் தலையை வெட்டி கொண்டு போய் போலீசில் சரணடைந்துள்ளார் மாமியார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மருமகள் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு, நடுரோட்டில் நடந்து வந்த மாமியாரை பார்த்து, பொதுமக்கள் அலறி தெறித்து ஓடினர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் கொத்தப்பேட்டை ராமாபுரம் என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் சுப்பம்மா.

இவருடைய மருமகள் பெயர் வசுந்தரா.. அவருக்கு 35 வயதாகிறது.. மாமியார் - மருமகளுக்கும் அடிக்கடி குடும்ப சண்டை வந்து கொண்டே இருக்குமாம்.

 தலை - மருமகள்

தலை - மருமகள்

அப்படித்தான் நேற்றும் தகராறு வெடித்துள்ளது.. அப்போது ஆத்திரம் அடைந்த மாமியார் மருமகள் வசுந்தராவை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.. பிறகு, அவரது தலையை தனியாக வெட்டி எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்தார்.. நடுரோட்டில் கூலாக, ஒருகையில் மருமகள் தலையை எடுத்துக் கொண்டே வேக வேகமாக நடந்து சென்றார்.. கையில் ரத்தம் வழிந்தபடி தலையை பார்த்ததும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.. ஆனால், மாமியார், நேராக தலையுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்..

 மாமியார் டென்ஷன்

மாமியார் டென்ஷன்

தலையை அங்கு டேபிள் மீது வைத்துவிட்டு, நடந்த சம்பவத்தை போலீசாரிடம் சொன்னார்.. இதையடுத்து மாமியாரை போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர கொலை குறித்து போலீஸ் தரப்பில் சொல்லப்படுவதாவது: "வசுந்தராவுக்கும் சும்பம்மாவின் மகனுக்கும் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.. ஆனால், சுப்பம்மாவுக்கும் வசுந்தரா குடும்பத்திற்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.. இதுகுறித்து தகராறுகள் நடந்து வந்த நிலையில், வசுந்தராவுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சுப்பம்மாவுக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

 ஆண் சகவாசகம்

ஆண் சகவாசகம்

இந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்தும் குடும்பத்தில் சண்டைகள் பெருகி வந்துள்ளன.. யார் சொல்லியும் ஆண் சகவாசத்தை, வசுந்தரா கைவிடவில்லை என்றும் தெரிகிறது.. இப்படி தவறான ஆண் தொடர்புகளால், வசுந்தரா தன்னுடைய குடும்பத்தின் சொத்தை அவரது பெயருக்கு மாற்றிவிடுவார் என்று மாமியார் பயந்துள்ளார்.. அதனால், வசுந்தராவை தீர்த்துக்கட்ட சுப்பம்மா முடிவு செய்தார்.. அதன்படி, சுப்பம்மாவும் மற்ற உறவினர்களும் சேர்ந்து, மதிய சாப்பாட்டுக்கு வருமாறு வசுந்தராவை அழைத்துள்ளனர்..

வசுந்தரா

வசுந்தரா

வசுந்தராவும், விருந்து சாப்பிட வந்துள்ளார்.. வீட்டினுள் நுழைந்ததுமே வசுந்தராவை கொடூரமாக கொன்று, அவரது தலையை துண்டித்துள்ளனர்.. அதற்கு பிறகு, தலையை எடுத்துக் கொண்டு போலீசில் சரணடைய வந்துள்ளார்.. ஆனால், போலீஸ் ஸ்டேஷனுக்கும், சுப்பம்மா வீட்டுக்கும் கிட்டத்தட்ட 6 கிமீ தூரம் உள்ளது.. இந்த 6 கிமீ தூரம் வரை சுப்பம்மா தலையுடன் நடந்தே வந்துள்ளார்.. அரிவாளால் மருமகளை கொன்ற மாமியாரை கைது செய்துள்ளோம்.. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்.. விசாரணையும் நடந்து வருகிறது" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+