ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்!
ஜெய்ப்பூரில் இருந்து ஹைதராபாத் சென்ற ஏர் ஏசியா விமானம் ஒன்று ஒரு இன்ஜிங் இயங்காத நிலையில் தரையிறக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்: ஜெய்ப்பூரில் இருந்து ஹைதராபாத் சென்ற ஏர் ஏசியா விமானம் ஒன்று ஒரு இன்ஜிங் இயங்காத நிலையில் தரையிறக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா முழுக்க பெரு நகரங்களில் கடந்த திங்கள் கிழமை விமான சேவை தொடங்கியது. டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் விமான சேவை தொடங்கி உள்ளது. இதற்கான டிக்கெட் விலையும், பல்வேறு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் ஜெய்ப்பூரில் இருந்து ஹைதராபாத் சென்ற ஏர் ஏசியா விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கி உள்ளது. இந்த விமானம் 70 பயணிகளுடன் சென்றுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
விமானம் தரையிறங்கும் சில மணி நேரம் முன் அதன் ஒரு எஞ்சினில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எஞ்சினுக்கு எரிபொருள் செல்வது தடை பட்டு இருக்கிறது. இதனால் ஒரு எஞ்சின் மொத்தமாக நின்று உள்ளது. இந்த நிலையில் ஒரே ஒரு எஞ்சின் மூலம் அந்த விமானம் மீதி தூரம் சென்றுள்ளது. இது ஏர்பஸ் 320 வகை விமானம் ஆகும்.
கடைசியில் ஒரே ஒரு எஞ்சின் உதவியுடன் இந்த விமானத்தை பைலட்கள் இருவரும் ஹைதராபாத்தில் வெற்றிகரமாக தரையிறக்கினார்கள். மிக சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை அவர்கள் தரையிறங்கி உள்ளனர். இந்த பிரச்னைக்கு காரணம் என்ன, விமானத்தில் என்ன கோளாறு ஏற்பட்டது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் காரணமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. லாக்டவுன் காலத்தில் இந்த விமானம் இத்தனை நாட்கள் இயங்காமல் இருந்தது, இந்த விமானத்தில் கோளாறு ஏற்பட காரணமா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications