மசூதியை நோக்கி அம்பு.. ஹிஜாப்பை கழற்று என சர்ச்சையை கிளப்பிய பாஜக வேட்பாளர் தோல்வி.. வீழ்த்திய ஓவைசி
ஹைதராபாத்: மசூதியை நோக்கி அம்பு விட்ட, ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். இதே தொகுதியில் போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசி வெற்றி பெற்றிருக்கிறார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிவந்துக்கொண்டிருக்கும் நிலையில், தெலங்கானா மாநிலத்தின் லோக்சபா முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இம்மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மாநில அரசை பொறுத்த வரை காங்கிரஸ்தான் ஆளும் கட்சியாக உள்ளது. எனவே லோக்சபா தேர்தலிலும் இதன் கை ஓங்குமா? அல்லது பாஜக போட்டி கொடுக்குமா? முன்னாள் முதல்வர் சந்திர சேகரராவின் பிஆர்எஸ் கட்சி முன்னிலை பெறுமா? என்கிற கேள்வி எழுந்திருந்தது.

இன்று காலை முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதில், காங்கிரசும், பாஜகவும் சரிபாதி தொகுதிகளில் முன்னிலையில் இருந்தன. மீதமிருந்த ஒரு தொகுதியில் ஓவைசி முன்னிலையில் இருந்தார். அப்போதிலிருந்து பிஆர்எஸ் கட்சியை பார்க்க முடியவில்லை.
தற்போது நிலவரப்படி காங்கிரசும், பாஜகவும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பதிவு செய்துள்ளன. மீதமுள்ள 15 தொகுதிகளில் 7ல் பாஜகவும், 7ல் காங்கிரசும், ஒரு தொகுதியில் ஓவைசியும் தனது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இவர் போட்டியிட்ட ஹைதராபாத் தொகுதியில், இவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறார். வெற்றிகாக ஓவைசி பற்றி பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், பாஜக வேட்பாளரான மாதவி லதா குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. காரணம் தேர்தல் பிரசாரத்தின் போது இவர் நடந்துக்கொண்ட விதம்தான்.
கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி ஹைதராபாத்தில் ஐதராபாத்தில் நடந்த ராமநவமி விழாவில் கலந்துகொண்டார். அப்போது, மசூதியை நோக்கி வில் அம்பை எய்வது போல் சைகை செய்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவின. மாதவி லதா மத வன்முறையை தூண்டுவதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
பிரசாரத்தின்போது வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் யாரும் சாதி, மதம் உள்ளிட்ட எதையும் வைத்து பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதை மீறியது மட்டுமல்லாது, அனுமதியே பெறாமல் ராமநவமி பேரணி நடத்தி, மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் நடந்துகொண்ட மாதவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
அதேபோல தேர்தல் நாளன்று வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம், ஹிஜாப்பை கழற்ற சொல்லி கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த வேட்பாளர் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?!












Click it and Unblock the Notifications