ஹைதராபாத்: சென்னையில் இருந்து சென்ற சார்மினார் ரயில் தடம்புரண்டு விபத்து.. 50 பேர் படுகாயம்
ஹைதராபாத்: சென்னையில் இருந்து சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் ஹைதராபாத் நம்பள்ளி ரயில் நிலையம் அருகே தடம்புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சார்மினார் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டதில் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலின் S2, S3, S6 உள்ளிட்ட 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நடைமேடையின் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயில் பெட்டிகள் நடைமேடை மீது மோதியதால் பலத்த சத்தம் கேட்டது. விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு ரயில்வே காவல் நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சார்மினார் எக்ஸ்பிரஸ் விபத்து சம்பவம் குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதன்படி பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
The incident occurred when the train bound for Chennai arrived on the platform, slipped off the track when halting and hit the sidewall.
— Madhuri Adnal (@madhuriadnal) January 10, 2024
Two bogies were reportedly derailed.#hyderabad #Nampally railway station pic.twitter.com/J0HRdpXcMG
கடந்த ஜூன் மாதம் ஒடிசாவில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதியது. அப்போது, எதிர் திசையில் வந்தஹவுரா அதிவிரைவு ரயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கின. இந்த கோர விபத்தில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்தனர். 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Some passengers sustained injuries as the Charminar Express train derailed on the platform at #Nampally railway station, #Hyderabad today.#trainaccident pic.twitter.com/wNXp2kuc0q
— Madhuri Adnal (@madhuriadnal) January 10, 2024
இந்த விபத்துக்கு பிறகு அடிக்கடி ரயில் விபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ரயில்கள் தடம் புரளுவது, தீப்பிடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications