லைவ் வீடியோவில் உடலுறவு.. 2 மகள்களின் கல்லூரி கட்டணத்துக்காக தம்பதி எடுத்த ஷாக் முடிவு! பின்னணி
ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதி நன்றாக படிக்கும் தங்களின் 2 மகள்களின் கல்லூரி கட்டணத்தை செலுத்த செல்போன் செயலியில் தங்களின் தாம்பத்திய உறவை லைவ் வீடியோவாக காண்பித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்கள் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களின் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். அவர்கள் விரும்பிய படிப்பை படிக்க வைக்க வேண்டும் என்ற தான் நினைக்கின்றனர். தாங்கள் தான் படிக்கவில்லை. தங்களின் மகன், மகள்கள் நன்றாக படித்து நல்ல வேலையில் அமர வேண்டும் என்பது தான் அனைத்து பெற்றோர்களின் கனவாக இருக்கிறது.

இதற்காக பல தம்பதிகள் தங்களின் மகன், மகளின் கல்வி செலவுக்காக இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் நன்றாக படிக்கும் 2 மகள்களின் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத தம்பதி பணத்துக்காக தங்களின் அந்தரங்கத்தை லைவ் வீடியோவாக செல்போன் செயலி மூலம் காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் நடந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தனது மனைவி, 2 மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். ஆட்டோ டிரைவருக்கு உடல் நல பிரச்சனை உள்ளது. தினமும் அவர் வேலைக்கு சென்றால் மட்டுமே குடும்பத்தில் உள்ள 4 பேரும் சாப்பிட முடியும். ஆனால் அவரது 2 மகள்களும் நன்றாக படிப்பார்கள்.
தற்போது ஒரு மகள் பிடெக் 2ம் ஆண்டு படிக்கிறார். இன்னொரு மகளும் கல்லூரியில் படித்து வருகிறார். உடல்நல பிரச்சனையால் ஆட்டோ டிரைவரால் தனது 2 மகள்களின் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அவரது மனைவியின் உழைப்பு என்பது குடும்ப செலவுக்கே போதுமானதாக உள்ளது. இந்த வறுமையிலும் 2 மகள்களையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று அந்த தம்பதி விரும்பினர். ஆனால் அவர்களின் சூழல் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால் அந்த தம்பதி வேறு முடிவை எடுத்தனர். அதாவது கணவன் - மனைவி இருவரும் தாம்பத்திய உறவு செய்வதை லைவ் வீடியோவாக செல்போன் செயலி மூலம் ஒளிபரப்பினர். இதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தங்களின் 2 மகள்களின் கல்லூரி கட்டணம் செலுத்த முடிவு செய்தனர். அதன்படி ஆட்டோ டிரைவர் தனது மனைவியுடன் உடலுறவு வைப்பதை வீடியோவாக குறிப்பிட்ட செல்போன் செயலி மூலம் லைவில் காட்டினார்.
இதுபற்றிய புகாரின் பேரில் அம்பர்பேட்டையில் உள்ள மல்லிகார்ஜுன நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஹை டெபினிஷன் கேமரா உள்பட சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த தம்பதியிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், ‛‛ நாங்கள் எங்களின் முகத்தை காட்டுவது இல்லை. மாஸ்க் அணிந்து கொள்வோம். லைவ் வீடியோவை ஆப்பில் காட்டும்போது ரூ.2 ஆயிரம் கிடைக்கும். ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோவை விற்றால் ரூ.500 கிடைக்கும். ஆட்டோ ஓட்டி தினமும் கிடைக்கும் பணத்தை விட இதில் அதிக வருமானம் கிடைத்தது'' என்றார்.
கைதான தம்பதி மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த தம்பதியிடம் இருந்து வீடியோவை வாங்கிய நபர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications