வாயில் மதுவை ஊற்றிக்கொடுத்து.. பின் டார்ச்சர்.. ஹைதராபாத் மருத்துவர் கொலையில் பரபர வாக்குமூலம்!
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட சம்பவம் குறித்து 4 கொலையாளிகளும் அதிர்ச்சி அளிக்க கூடிய வாக்குமூலத்தை அளித்தனர்.
Recommended Video
சென்னை: ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட சம்பவம் குறித்து 4 கொலையாளிகளும் அதிர்ச்சி அளிக்க கூடிய வாக்குமூலத்தை அளித்தனர். அந்த பெண்ணுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து அவர்கள் நான்கு பேரும் கொடுமை செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் 26 வயது கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, பின் மோசமாக கொடுமைபடுத்தப்பட்டு கடந்த புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார்.
ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த வன்புணர்வு சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து அந்த பெண்ணின் உடலை பெங்களூர் - ஹைதராபாத் ஹைவே கொண்டு சென்று அங்கு வைத்து எரித்துள்ளனர்.

நான்கு பேர்
இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் அதன்பின் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொலையாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குமூலம்
இந்த கொலை குறித்து அதிர்ச்சி அளிக்க கூடிய வாக்குமூலங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. போலீசால் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் வாக்குமூலங்களை அளித்துள்ளனர். அதன்படி அந்த பெண் பைக்கை டோல் கேட் அருகே நிறுத்திய 20 நிமிடத்தில் அவரின் பைக்கை பஞ்சர் செய்துள்ளனர். பின் அந்த பெண் வர வேண்டும் என்று காத்து இருந்துள்ளனர்.

லாரி டிரைவர்
அதன்பின் அந்த பெண் இரவு 9.25 மணிக்கு அங்கு வந்த பின், உதவி செய்வது போல முக்கிய குற்றவாளியான லாரி டிரைவர் பைக்கை வாங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். மற்ற மூன்று ஆண்களும் அந்த பெண்ணை தாக்கிவிட்டு, அருகில் இருந்த புதருக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலில் அந்த பெண்ணின் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.

வன்புணர்வு செய்தனர்
அதற்கு பிறகு அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளனர். ஆனால் அந்த பெண் தொடர்ந்து கத்திகொண்டே இருந்தார் என்பதால், அவரின் வாயில் மதுவை ஊற்றி கொடுத்துவிட்டு, பின் தலையில் கல்லால் அடித்துள்ளனர். கடைசியால் கொலை செய்துவிட்டு அங்கிருந்து 27 கிமீ அவரின் உடலை லாரியில் வைத்து கொண்டு சென்றுள்ளனர்.

செக் போஸ்ட்
27கிமீ தூரத்தில் இரண்டு செக் போஸ்ட்டுகளை அவர்கள் கடந்து சென்றுள்ளனர். ஆனால் அவர்களை போலீஸ் அப்போது சந்தேகப்படவே இல்லை . பின் அதிகாலை 2.30 மணிக்கு அந்த பெண்ணின் உடலை பாலத்திற்கு கீழ் வைத்து கொன்றுள்ளனர்.

போலீசார் கண்டுபிடித்தனர்
இந்த உடலை 24 மணி நேரம் கழித்துதான் போலீசார் கண்டுபிடித்தனர். நள்ளிரவில் கொலை நடந்ததால், அங்கு யாரும் தங்களை பார்க்கவில்லை என்று 4 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களின் இந்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications