போலீஸ் துப்பாக்கியை பிடுங்கிய ஒருவன்.. சுட்டுவிட்டு ஓட பிளான்.. என்கவுண்டருக்கு முன் நடந்த சம்பவம்!
ஹைதராபாத்தில் 4 வன்புணர்வு குற்றவாளிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்படும் முன் நடந்த சம்பவங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 4 வன்புணர்வு குற்றவாளிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்படும் முன் நடந்த சம்பவங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத் வன்புணர்வு வழக்கில் தற்போது மாபெரும் திருப்பம் நிகழ்ந்து இருக்கிறது. அங்கு குற்றம் செய்த 4 பேரும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர். தெலுங்கானா போலீஸ் இவர்களை என்கவுண்டர் செய்தது.

போலீஸ் தகவல்
இந்த என்கவுண்டர் குறித்து ஹைதராபாத் போலீசார் கொடுத்த தகவலின்படி, காலை 3.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு விசாரணை செய்ய வேண்டும் என்று போலீஸ் சென்றது. அங்கு செல்லும் போது 4.50 மணி ஆகியுள்ளது. அதன்பின் 6 மணி வரை விசாரணை நடந்துள்ளது.

அமைதி
அதுவரை குற்றவாளிகள் அமைதியாக இருந்துள்ளனர். ஆனால் பொழுது விடிந்ததும், அதை பயன்படுத்திக் கொண்டு தப்பித்து ஓட முயற்சித்துள்ளனர். அப்போது அங்கு இருந்த இன்ஸ்பெக்டரை தாக்கி அவரின் துப்பாக்கியை குற்றவாளி ஒருவன் பிடுங்கி உள்ளான்.

துப்பாக்கி தாக்குதல்
துப்பாக்கியை போலீசை நோக்கி திருப்பிவிட்டு பயமுறுத்தி உள்ளான். இதனால் மற்ற மூன்று பேரும் தப்பித்து ஓட தொடங்கி உள்ளனர். பின் துப்பாக்கியை பிடுங்கிய குற்றவாளியும் அதை மேலே நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயன்று இருக்கிறான்.

காயம் அடைந்தனர்
இந்த தாக்குதல் சம்பவத்தில் 6 போலீசார் காயம் அடைந்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த போலீஸ் படை அவர்களை நோக்கி சுட்டு இருக்கிறது. இந்த தாக்குதலில்தான் 4 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றாவளிகளின் தாக்குதல் முயற்சிதான் என்கவுண்டருக்கு காரணம் என்று போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications