விமரிசையாக நடந்த ஓரின சேர்க்கையாளர் திருமணம்! திரண்டு வந்து வாழ்த்திய குடும்பம்! நம்ம நாட்டில்தாங்க
ஹைதராபாத்: தெலங்கானாவில் திருநங்கை நடத்தி வைத்த முதல் தன்பால் ஈர்ப்பாளர்களின் திருமணம் தொடர்பான கலக்கலான படங்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
ஓரினச்சேர்க்கை எனப்படும் தன்பால் ஈர்ப்பு குற்றமாகக் கூறப்பட்டிருந்த சட்டப்பிரிவு 377ஐ கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தனது வரலாற்றுத் தீர்ப்பின் மூலம் ரத்து செய்தது.
இரு சட்ட பூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வது குற்றமாகாது என்ற அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலும் தன்பால் ஈர்ப்பு குற்றமில்லை என்ற நிலை ஏற்பட்டது.

தன்பால் ஈர்ப்பாளர்கள்
இந்தியாவில் தன்பால் ஈர்ப்பாளர்கள் ஒன்றாக இருப்பது குற்றமாகாது என்று அறிவிக்கப்பட்ட போதிலும், இந்தியச் சமூகம் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டியே வருகிறது. தன்பால் ஈர்ப்பு என்பது இயற்கையானது என்று பல்வேறு ஆய்வுகளில் கூறப்பட்டுள்ள போதிலும், சமூகத்தில் பலரும் இதைத் தொடர்ந்து ஏற்க மறுத்தே வருகின்றனர். இதனால் தான் தன்பால் ஈர்ப்பார்களால் தங்கள் காதல், திருமணம் உள்ளிட்டவை குறித்துக் கூட ஓப்பான வெளியே சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கலக்கல் திருமணம்
இந்த சூழலில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தன்பால் ஈர்ப்பாளர்கள் இருவர் திருமணம் செய்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. இந்த புத்தம் புதிய திருமணம் தம்பதிக்கு மட்டுமல்ல, திருமண விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களும் கூட மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த திருமண விழாவில் சுப்ரியோ சக்ரவர்த்தி மற்றும் அபய் டாங் ஆகியோர் திருணம் செய்து கொண்டனர். அழகிய வெள்ளை கோர்ட் அணிந்திருந்த இவர்கள், மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

நடத்தி வைத்த திருநங்கை
இதில் மற்றொரு சிறப்பம்சம் என்றால் இந்த திருமணத்தை நடத்தி வைத்தவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த சோபியா டேவிட் என்ற திருநங்கை ஆவர். ஹைதராபாத்தை அடுத்துள்ள விகாராபாத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் தம்பதியின் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தன்பால் ஈர்ப்பாளர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அனைவரும் மகிழ்ச்சி
இந்த திருணத்தை நடத்தி வைத்தவர் திருநங்கை சோபியா டேவிட். இந்தியாவில் தன்பால் ஈர்ப்பாளர்களின் திருமணத்தை நடத்தி வைத்த முதல் நபராகக் கூட இவர் இருக்கலாம். தெலுங்கானா டுடே செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் தம்பதி மோதிரம் மாற்றிக் கொள்ளும்போது, அங்கிருந்த அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது. அனைவரும் இந்த திருணத்தை முழு மனதுடன் வாழ்த்தினர்.

பதற்றம்
இது வழக்கமான ஒரு நிகழ்வு இல்லை. இதனால் எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. யாரே இருவருக்கு நான் திருணத்தை நடத்தி வைக்கவில்லை. இருவருமே எனது நண்பர்கள். இதனால் மிக அதிக பதற்றமாக இருந்தது. இந்த விழாவை எப்படி நடத்த வேண்டும் என அனைத்து திட்டங்களையும் நான் தான் வகுத்தேன். இதற்கான முழு சுதந்திரத்தையும் தம்பதி எனக்கு வழங்கினர்.

உரையாடலைத் தொடங்கி வைக்கும்
இந்த திருமண நிகழ்வில் நாங்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டோம். தம்பதி தொடங்கி விருந்தினர்கள் வரை அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள். அது தான் திருமணம். தவிர, இந்தியாவில் தன்பால் ஈர்ப்பாளர்களின் உரிமைகள் மற்றும் திருமண சமத்துவம் பற்றிய உரையாடலைத் தொடக்கும் புள்ளியாக இது இருக்கும் என எனக்குத் தெரியும். இது தான் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. எங்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது இப்போது மிகவும் முக்கியமானது" என்று அவர் தெரிவித்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications