ஹைதராபாத்தின் முக்கிய இடங்களை தகர்க்க சதி? வெடிகுண்டுகளுடன் இருந்த இரு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது!
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைத்துத் தாக்குதல் நடத்த முயன்ற இரு தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் சூழலில், அவர்களுக்குப் பின்னணியில் இருப்பது யார்.. அவர்களின் திட்டம் என்ன உள்ளிட்டவை குறித்த முக்கிய தகவல்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது.
கடந்த மாதம் காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடைபெற்றது. அதில் அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். அதில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாகவே இந்திய பாதுகாப்புப் படை ஆபரேஷன் சிந்தூரை நடத்தியிருந்தது.

பயங்கரவாத முயற்சி முறியடிப்பு
அதேநேரம் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுக்க மீண்டும் இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என உளவுத் துறை எச்சரிக்கை அளித்திருந்தது. இதனால் பல இடங்களில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியிருந்தனர். இதற்கிடையே தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பயங்கரவாத முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச போலீசாருடன் இணைந்து தெலுங்கானா போலீசார் நடத்திய இந்த ஆபரேஷனில் ஹைதராபாத்தில் வெடிகுண்டு வைக்கத் தீவிரவாதிகள் போட்டிருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.. மேலும், ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பை நடத்தத் திட்டமிட்டதாகக் கூறி விஜயநகரத்தைச் சேர்ந்த சிராஜ் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமீர் ஆகிய இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இருவர் கைது
இதற்காக விஜயநகரத்தில் இருந்து சிராஜ் வெடிபொருட்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது. சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட ஒரு ஐஎஸ்ஐஎஸ் பிரிவிடம் இருந்து இவர்களுக்கு உத்தரவு வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் ஹைதராபாத்தில் வெடிகுண்டுகளை வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து பயங்கரவாதிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா புலனாய்வு போலீசாரும் மற்றும் ஆந்திரப் பிரதேச புலனாய்வு போலீசாரும் இணைந்து இந்த அதிரடி ஆபரேஷனை நடத்தியுள்ளனர்.
போலீஸ் விசாரணை
இந்த இருவரும் எந்த இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.. இவர்களுக்கு வேறு யாரேனும் உதவினரா.. இவர்கள் எங்கு வெடிகுண்டு வாங்கினார்கள் என்பது போன்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக மட்டுமே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டில் வேறு சில இடங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறை எச்சரித்திருந்தது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் உட்படப் பல மாநிலங்களில் போலீசார் இது தொடர்பான விசாரணையில் இறங்கினர்.
தொடரும் தீவிர விசாரணை
தேசிய புலனாய்வு அமைப்பும் கூட பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்விந்தர் சிங் என்பவரது கேங்கிற்கு தொடர்புடைய 15 இடங்களில் பஞ்சாபில் சோதனை நடத்தியிருந்தது. கடந்த ஆண்டு குருதாஸ்பூரில் போலீஸ் நிலையத்தில் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் மீது நடந்த குண்டுவெடிப்பில் இந்த கும்பலுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியிருந்தது. அதில் பல முக்கிய தீவிரவாதிகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டனர். இந்திய பாதுகாப்புப் படையின் இந்த வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமலேயே எல்லையில் அத்துமீறும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாகவே நாட்டில் முக்கிய நகரங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications