டெலிவரிக்கு கொடுத்தனுப்பிய லேப்டாப்புடன் தலைமறைவான டெலிவரி ஊழியர்.. அடுத்து செய்தது ஹைலைட்
ஹைதராபாத்: கணவரிடம் ஒப்படைக்குமாறு கொடுத்தனுப்பிய லேப்டாப்பை ஸ்விக்கி ஜீனி டெலிவரி பாய் திருடிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள ஹைதராபாத் பெண். லேப்டாபை திரும்ப கொடுக்க வேண்டும் என்றால், 15000 தர வேண்டும் என்று மிரட்டினாராம். இதனால் நொந்து போன அந்த பெண் இதுபற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்போது மளிகை பொருட்கள் வாங்க, காய்கறிகள் வாங்க, நம்மிடம் உள்ள ஒரு பொருளை வேறுஒருவரிடம் டெலிவரி செய்ய என எல்லாவற்றுக்கும் ஆன்லைன் ஆப் வந்துவிட்டது. உங்களிடம் ஏதாவது பொருள் இருந்தால், அதனை உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால், நீங்கள் நேரில் போகத்தேவையில்லை.. அதற்கு பதில் அதற்கு என்று உள்ள ஆன்லைனில் ஆப்களில் புக் செய்தால் வீட்டில் வந்து வாங்கி சென்று, நீங்கள் யாரிடம் கொடுக்க சொல்கிறீர்களோ அங்கு டெலிவரி செய்துவிடுவார்கள். இதேபோல் எதாவது ஒரு பொருளை வாங்கி, உங்களிடம் தர வேண்டும் என்றாலும் ஆன்லைனில் ஆப் இருக்கிறது. பிரபல ஆன்லைன் நிறுவனங்களான ஸ்விக்கி, ஜெமேட்டோ, ஜாப்டோ, பிக் பாஸ்கெட், போர்டர் என பல ஆப்கள் உள்ளன.

இந்நிலையில் ஹைதராபாத்தின் மாதப்பூரில் சிவில் என்ஜினியராக உள்ள நிஷிதா குடிபுடி என்ற பெண், தனது கணவருக்கு லேப்டாப்பை டெலிவரி செய்ய விரும்பினார். அதற்காக அவரது கணவர் சமீபத்தில் ஸ்விக்கி ஜெனி டெலிவரி சேவையை முன்பதிவு செய்துள்ளார். அதன்படி வந்த டெலிவரி பாய், லேப்டாப்பை பையுடன் வாங்கி கொண்டு சென்றுள்ளார். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அந்த டெலிவரி பொய், செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து தலைமறைவாகி விட்டார்.
இதனால் கணவன், மனைவி இருவருக்குமே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனால் நிஷிதாவின் கணவர் உடனடியாக ஸ்விக்கியின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டுள்ளளார். ஆனால் முன்பதிவுடன் இணைக்கப்பட்ட டெலிவரி பாய் இவர் இல்லை என்று கூறியதுடன், இரண்டு படங்களை அனுப்பி, எந்த நபர் பார்சலை எடுத்தார் என்பதை அடையாளம் காணும்படி கேட்டது. ஆனால் அவர்கள் யாருமே இல்லை என்பது தெரியவந்தது.
அதேநேரம் ஸ்விக்கியில் வேலை செய்யும் ஒருவரின் லாக் இன் ஐடியை அவரது நண்பர் தான் இப்படி தவறாக பயன்படுத்தி ஆர்டரை வாங்கினார் என்பது தெரியவந்தது. செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆன நிலையில், லேப்டாபை வாங்கி சென்றவரிடம் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அவர் லேப்டாப்பை திருப்பித் தர வேண்டும் என்றால் ரூ.₹15,000 தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 15000 பணத்தை கொடுத்தால், பைக்-டாக்ஸி சேவையான ரேபிடோ மூலம் உடனே உங்களுக்கு டெலிவரி செய்கிறேன் என்று மெசேஜ் அனுப்பி உள்ளார்.
இதுபற்றி சிவில் என்ஜினியர் நிஷிதா குடிப்புடி தனது லிங்க்ட்இன் சமூக வலைதளப்பக்கத்தில் வாட்ஸ்அப் உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்களையும், ஸ்விக்கியில் பதிவுசெய்யப்பட்ட நபரின் படங்கள் மற்றும் வேறு ஒருவரின் லாக் இன் ஐடியை பயன்படுத்தி உள்நுழைய ஸ்விக்கி அனுமதித்ததாகக் கூறப்படும் மற்றொரு நபரின் படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications