Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹைதராபாத்தில் நல்ல வேலை, சம்பளம்.. திருமணத்திற்கு ஐடி பெண் ஊழியர் போட்ட கண்டிசன்.. இப்படியா ஆகணும்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான குண்லகோயா பகுதியை சேர்ந்த 26 வயதாகும் விஜயலட்சுமி என்பவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர், தாயார் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். இவர் நன்கு படித்து சாப்ட்வேர் என்ஜினியர் ஆனார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. இவரது தாய் சற்று மனநலம் சரியில்லாதவர். இவரும் திருமணத்திற்கு பிறகு தன்னுடனே இருப்பார் மாப்பிள்ளைகளுக்கு நிபந்தனை விதித்து வந்துள்ளார். இதனால் யாருமே திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த விரக்தியில் விஜயலட்சுமி எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது.

தெலுங்கானாவின் மேட்சல் மாவட்டம் குண்லகோயா பகுதி ஹைதராபாத்தின் புறநகர் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு வசித்து வரும் 26 வயதாகும் விஜயலட்சுமி என்பவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர், தாயார் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். இவர் சாப்ட்வேர் என்ஜினியர் ஆவார். ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. தாயாருக்கு மனநிலை சரியில்லை.

Hyderabad women techy get good jobs and good salary but a twist for marriage condition

இதனால் விஜயலட்சுமி தனது தாயை தன்னுடன் வைத்து பராமரித்து வந்துள்ளார்.. சமீபத்தில் எத்தனையோ பேர் விஜயலட்சுமியை பெண் கேட்டு வந்துள்ளார்கள். ஆனால் தனது தாயார் தன்னுடன் தான் இருப்பார் என்று நிபந்தனை விதித்ததால் யாரும் அவரை திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தீவிர மன வேதனைக்கு ஆளான விஜயலட்சுமி கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடுதிரும்பவில்லை. அவரது நெருங்கிய உறவினரான அபிஷேக் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் உசேன் சாகர் ஏரியில் ஒரு பெண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அது விஜயலட்சுமியின் உடல் என்பதை உறவினர்கள் உதவியுடன் உறுதி செய்தனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கல்யாணம் ஆக விரக்தியில் இளம் பெண் எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் ஆன பெண் குடும்ப தகராறில் விபரீத முடிவு எடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூடநகரம் ஊராட்சி பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மகன் ராஜேஷ்க்கு 25 வயது ஆகிறது. குடியாத்தத்தில் சலூன் கடை வைத்திருக்கிறார். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பால்வார்த்து வென்றான் கிராமத்தை சேர்ந்த 21 வயதாகும் ஏழுமலை மகள் சங்கீதா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 9 மாத ஆண் குழந்தையும் இருக்கிறது.

நேற்று காலையில் குடியாத்தத்தில் உள்ள சலூன் கடைக்கு ராஜேஷ் சென்றுவிட்டார். வீட்டில் சங்கீதா மற்றும் அவரது மாமியார் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறது. குழந்தையை எடுக்கும்படி சங்கீதாவை அழைக்க சென்று பார்த்த போது அறையில் சங்கீதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு சங்கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப் பதிவு செய்து சங்கீதாவின் முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். சங்கீதாவிற்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, சங்கீதாவின் கணவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+