Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் மிக இளம் வயது ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால்.. இப்போது எட்டியுள்ள பதவி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இந்தியாவிலேயே மிக இளம் வயதில் ஐஏஎஸ் அதிகாரி ஆகியிருந்தார் ஸ்மிதா சபர்வால். அதுவும் இப்போது அல்ல.. சரியாக 24 வருடம் முன்பே ஐஏஎஸ் ஆகிவிட்டார்.. வெறும் 23 வயதில் இந்தியாவில் ஐஏஎஸ் அதிகாரியான ஐஏஏஸ் அதிகாரிகளில் இவரும் ஒருவர். இந்த 24 வருடத்தில் தெலுங்கானாவின் 12 துறையில் பணியாற்றி உள்ளார். ஐஏஎஸ் ஆக ஆசைப்படுவோர் அவரது வெற்றி கதையை பாருங்கள்.

அண்மையில் '12த் பெயில்' என்ற திரைப்படம் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக விரும்புவோருக்கு உத்வேகம் தந்த படமாக இருக்கிறது. அந்த படம் சிவில் சர்வீஸ் எழுதுவதற்காக டெல்லி நகர விதிகளில் உள்ள பயிற்சி மையங்களில் படித்து வரும் இளைஞர்களை பற்றிய கதையாக இருக்கும். உண்மையில், அந்த படத்தில் வரும் அத்தனை காட்சிகளும் உண்மை. அவ்வளவு எளிதாக ஐஏஎஸ் அதிகாரியாகவோ, ஐபிஎஸ் அதிகாரியாகவோ ஆகிவிட முடியாது, அதற்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களை படித்து கரைத்து குடித்திருக்க வேண்டும்.

telangana ias

இதுதவிர எந்த விருப்ப பாடத்தை தேர்வு செய்கிறார்களோ, அதில் இவர்களுக்கு தெரியாத விஷயங்களே இருக்கக்கூடாது. முழுமையாக ஆத்மார்த்தமாக படித்து சரியான பயிற்சி மேற்கொள்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். கல்வி என்ற ஆயுதம் மூலம் யார் மிக மிக துல்லியமாக இலக்கை நோக்கி பயணிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள். இன்னும் தெளிவாக சொல்வது என்றால், யார், மிக குறைவாக தவறுகளை செய்கிறார்களோ அல்லது தவறு செய்யாமல் கடக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆகிறார்கள்..

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், வன அதிகாரி, தபால் அதிகாரி, ரயில்வே அதிகாரி உள்பட யுபிஎஸ் தேர்வு என்பது பலருக்கும் மிகப்பெரிய கனவு. அதனை அடைவதற்கு கல்வி தான் ஆயுதம். கடின உழைப்பு தான் மிகப்பெரிய நம்பிக்கையான வார்த்தை. ஏனெனில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது டீ காபி சாப்பிடுவது போல் எளிதானது அல்லல. பலரும் இரண்டு அல்லது மூன்று முயற்சிகளுக்குப் பிறகும் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போராடுகிறார்கள்.

முதற்கட்ட தேர்வில் வென்றாலும் மெயின் தேர்வில் வெல்வது எளிதானது இல்லை.. பலரும் பலமுறை முயற்சித்தும் வெற்றி பெற முடியாத சிம்மாசனம் ஆகும். கல்வியின் மூலம் உயர்ந்த அதிகாரத்தை அடைய முடியும் என்பதற்கு யுபிஎஸ்சி தேர்வு சிறந்த உதாரணம் ஆகும். இதனை மிக இளம் வயதிலயே சாதித்தவர்கள் பலர் உள்ளார்கள். அதில் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வாலும் ஒருவர். யுபிஎஸ்சி தேர்வில் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்ற இவர், வெறும் 23 வயதில் இந்தியாவின் ஐஏஎஸ் அதிகாரியானார்.

1977ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பெங்காலி குடும்பத்தில் பிறந்தார் ஸ்மிதா சபர்வால். ராணுவ அதிகாரி கர்னல் பிரணாப் தாஸ் மற்றும் புரபி தாஸ் ஆகியோரின் மகள் ஆவார். மிக இளம் வயதில், வெறும் 23 வயதில் ஸ்மிதா சபர்வால் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்தியாவின் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரானார். ஸ்மிதா சபர்வால் ஹைதராபாத் நகரில் மிகப்பிரபலமான பகுதியான செகந்திராபாத்தில் உள்ள செயின்ட் ஆன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

அதன்பின்னர் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட்டில் உள்ள கத்தோலிக்க சிறுபான்மை நிறுவனமான செயின்ட் பிரான்சிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின்னர் இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார். ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால் "மக்கள் அதிகாரி" என்று மக்களால் போற்றப்படுகிறார். வாரங்கல், விசாகப்பட்டினம், கரீம்நகர் மற்றும் சித்தூர் உட்பட ஒருங்கிணைந்த ஆந்திராவின் பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ளார். முதலமைச்சரின் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்ட மிக இளம் வயது அதிகாரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிதா சபர்வால் 2001ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஸ்மிதா சபர்வால் 2000 ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவர் அகில இந்திய அளவில் 4வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். தெலுங்கானா முதல்வரின் அலுவலகத்தில் செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான ஸ்மிதா சபர்வால் தற்போது தெலுங்கானா நிதிக் கழகத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+