ஆதித்யா எல் 1.. திருப்பதி ஏழுமலையானிடம் மினியேச்சர் வைத்து வேண்டிய இஸ்ரோ விஞ்ஞானிகள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் : ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ஆதித்யா எல்-1 விண்கலத்தை போன்று சிறிய அளவிலான மாதிரியை ஏழுமலையான் கோவிலில் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக 'ஆதித்யா எல்-1'என்ற விண்கலத்தை ஏவவுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் ஏவ இருக்கிறது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. 100-120 நாட்கள் பயணித்து ஆதித்யா L1 விண்கலம் சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடையும்.

ISRO scientists offer prayers Tirumala Balaji Temple with a miniature model of the Aditya-L1 Mission

ஆதித்யா L1 திட்டத்தின் நோக்கம் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட கொரானா மற்றும் சூரியனின் முதல் மூன்று அடுக்குகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ளது. நாளைய தினம் சனிக்கிழமை காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி எக்ஸ்எல் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.

ராக்கெட் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்கி உள்ளது. இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ஆதித்யா எல்-1 விண்கலத்தை போன்று சிறிய அளவிலான மாதிரியை ஏழுமலையான் பாதத்தில் வைத்து விஞ்ஞானிகள் வேண்டிக்கொண்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஏழுமலையான் கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்து சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து ஒவ்வொரு முறை ராக்கெட் ஏவும் பொழுதும் விஞ்ஞானிகள் திருமலைக்கு வந்து ஏழுமலையானை வேண்டிக்கொள்வார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்திரயான் 3 பயணம் வெற்றி பெற வேண்டும் என்று விஞ்ஞானிகள் மினியேச்சர் வைத்து வழிபாடு நடத்தினர். ஆதித்யா எல் 1 மிசன் வெற்றிக்காக தமிழ்நாட்டில் சூரியனார் கோவிலில் சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+