ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைக்கும்.. பிரசாந்த் கிஷோர் கணிப்பு
ஹைதராபாத்: ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையின ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைக்கும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது. அங்கு மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. ஆந்திரவை ஆளும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சி (சந்திரபாபு நாயுடு) பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகியவை ஒரு அணியாகவும் போட்டியிட்டன.

இந்நிலையில் நேற்று நடந்த முடிந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சியினர் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆந்திராவின் பல்நாடு, கடப்பா, அன்னமாயா மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடந்தது. பல்நாடு மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சியினர் நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் அச்சம் எழுந்தது. தெனாலி சட்டசபை தொகுதியில் வாக்காளர் ஒருவரை தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சிவகுமார் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் குண்டூர் மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபி ரெட்டி ஸ்ரீனிவாஸ் வீட்டை தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டு தாக்கினார்கள். தும்மரகோட்டா பகுதியில் தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இடையே அடிதடி ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. மாச்சர்ல தொகுதி செட்டிபாளையம், ரெயில்வே கொடூர் தொகுதியின் தலவாய்பள்ளி வாக்குச்சாவடிகளில் மர்ம கும்பல் புகுந்து, அங்கிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை உடைத்து நொறுக்கியதால், ஓட்டுப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
சித்தூரின் மாண்டி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பணியில் இருந்த ஆளுங்கட்சி ஏஜென்டு சுரேஷ் ரெட்டியை தெலுங்குதேசம் கட்சியினர் கத்தியால் குத்தியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இப்படி பல்வேறு சம்பவங்களுடன் சட்டசபை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
இந்நிலையில், ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைக்கும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது கணிப்பினை தெரிவித்துள்ளார். அது தொடர்பாக செய்தியாளர்ளுக்கு பிரசாத் கிஷோர் அளித்த பேட்டியில், "ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 67 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி கட்சிகள் 106 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
இதே போல 25 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி 15 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவே நான் நம்புகிறேன். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ச்சியான தவறுகளை செய்திருக்கிறார். முதலில் ஜெகன் மோகன் ரெட்டி தனது அம்மாவையும், தங்கையையும் பார்த்திருக்க வேண்டும். இருவரும் அவருக்கு எதிராக இருக்கிறார்கள்.
2019 தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராகவே நின்றிருக்கிறார்கள். அதுவே ஜெகனுக்கு ஆபத்தானது. கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒரு ராஜா போல பாவித்துக் கொண்டு நடந்தார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் போல அவர் நடந்து கொள்ளவில்லை. மேலும் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு துரோகம் செய்துள்ளார். 2019 தேர்தலில் நாங்கள் உதவி இருக்காவிட்டால் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார். கடந்த சில மாதங்களாக ஜெகன் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கூறி வருகிறேன். இது எனது கணிப்பு" இவ்வாறு ஆந்திரா தேர்தல் குறித்த பிரசாந்த் கிஷோர் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications