இதுதான் கேசிஆர்.. நெருங்கும் தேர்தல்! தெலுங்கானாவில் ட்விஸ்ட்! அதிர்ச்சியில் காங்கிரஸ்.. புது சர்வே
ஹைதராபாத்: தெலுங்கானாவில் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போது வெளியாகியுள்ள புது சர்வே அங்கு கள நிலவரம் எவ்வளவு சீக்கிரம் மாறி வருகிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது.
நமது நாட்டில் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கே வரும் நவ.30ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து டிச.3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தெலுங்கானாவில் இப்போது பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், கேசிஆர் முதல்வர் பதவியில் இருக்கிறார். அங்கே தற்போது பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தெலுங்கானா: தேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. அங்கே 70 இடங்களைப் பெறும் கட்சிகள் மட்டுமே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க முடியும். அந்த மெஜிக் நம்பரை நோக்கியே இப்போது அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வேலை செய்து வருகிறது..
இதற்கிடையே ஜன்மத் என்ற அமைப்பு தெலுங்கானா சட்டசபைத் தேர்தல் தொடர்பான புது சர்வேயை வெளியிட்டுள்ளது. அதில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனக் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் 119 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி 57-59 இடங்களில் வெல்லும் என்று ஜன்மத் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ்: அதேபோல ரேவந்த் ரெட்டி தலைமையில் இறங்கும் காங்கிரஸ் கட்சியால் அங்கே 49-51 இடங்களில் வெல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கே எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டசபை அமையும் எனக் கூறப்பட்டுள்ளது. பழைய ஹைதராபாத் பகுதியில் வலிமையாக இருக்கும் ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி இந்த முறையும் 6 அல்லது 7 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு வரை தெலுங்கானாவில் மிக வேகமாக வளர்ந்து வந்த பாஜகவின் தற்போதைய நிலை அங்கு ரொம்பவே பரிதாபமாக இருக்கிறது. தெலுங்கானாவில் இப்போது பாஜகவால் வெறும் 4 அல்லது 5 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகளால் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் என்று ஜன்மத் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
உணர்த்துவது என்ன: இந்த புது சர்வேயில் தெலுங்கானாவில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை என்றாலும் பிஆர்எஸ் கட்சி தனிப்பெரும்பான்மை கட்சியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்த ஒரு கட்சி இந்தளவுக்கு இடங்களைப் பெறுவது பெரிய விஷயம் தான். மேலும், தெலுங்கானாவில் ஓரிரு வாரங்களுக்கு முன்பு வரை வந்த சர்வேக்களில் காங்கிரஸ் கட்சிக்கே வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த ஒரு வாரமாக வெளியாகும் சர்வேக்கள் அங்குள்ள கள நிலவரம் மாறி வருவதை உணர்த்துகிறது. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை என்ற நிலையில் இருந்து இப்போது இரண்டாவது நிலைக்குச் சென்றுள்ளது.. மறுபுறம் பிஆர்எஸ் கட்சி தீவிர பிரச்சாரத்தைக் கையில் எடுத்துள்ள நிலையில், அதற்கு கைமேல் பலன் கிடைப்பதையும் இந்த சர்வேக்கள் காட்டுகிறது.
என்ன காரணம்: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தை நல்ல முறையில் தொடங்கினாலும் கூட வேட்பாளர் அறிவிப்பிற்குப் பிறகு அங்கே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ளூரில் உள்ள முக்கிய தலைவர்களுக்கு சீட் வழங்காததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் சுயேச்சையாக அல்லது வேறு கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது. இதுவும் காங்கிரஸ் செல்வாக்கு அங்கே குறையக் காரணமாக இருக்கிறது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications