அன்று சிலிண்டரில் ஸ்டிக்கர்..இப்போ வாஷிங் பவுடர் நிர்மா என விளம்பரம்..பாஜகவை கலாய்த்த கேசிஆர் கட்சி
அமித்ஷா தெலுங்கானா வருகையை ஒட்டி வாஷிங் பவுடர் நிர்மா விளம்பரத்தை வைத்து ஆளும் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சி நையாண்டி செய்துள்ளது.
ஐதராபாத்: தெலங்கானாவில் நியாய விலைக் கடைகளில் ஏன் பிரதமர் மோடி படம் இல்லை என்று கேள்வி எழுப்பிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆளும் அரசு சிலிண்டரில் மோடி படத்தை ஒட்டி கேலி செய்து இருந்த நிலையில், தற்போது அமித்ஷா வருகையை ஒட்டி வாஷிங்பவுடர் நிர்மா விளம்பரத்தை வைத்து ஆளும் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சி நையாண்டி செய்துள்ளது. பாஜகவில் இணைந்தால் ஊழல் குற்றச்சாட்டுகள் நீங்கிவிடுவதாக விமர்சிக்கும் வகையில் இந்த விளம்பரங்களை வைத்துள்ளது.
உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா நேற்று ஐதராபாத் சென்றார்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) 54-வது ரைசிங் டே (உதயமான தினம்) நேற்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள தேசிய தொழில் பாதுகாப்பு அகடமியில் வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமித்ஷா கலந்து கொண்டார். இதற்காக ஐதராபாத் வந்த அமித்ஷாவை வரவேற்க பாஜகவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

வாஷிங் பவுடர் நிர்மா
மறுபுறம் தெலுங்கானாவின் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி கட்சி, அமித்ஷாவை கேலி செய்யும் வகையில் பல்வேறு இடங்களில் பதாகைகளை வைத்தது. "வாஷிங் பவுடர் நிர்மா" என்ற வாசகங்களுடன் பிற கட்சிகளில் இருந்து கடந்த சில ஆண்டுகளில் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோரது புகைப்படங்களை நிர்மா வாஷிங் பவுடர் விளம்பரத்தில் வரும் சிறுமியின் முகத்திற்கு பதிலாக இவர்களது படங்களை இடம் பெறச்செய்து பதாகைகளை வைத்து இருந்தனர். பதாகைகளுக்கு கீழே வெல்கம் டூ அமித்ஷா என்ற வார்த்தையும் இடம் பெற்றுள்ளது. ஐதராபாத்தில் திடீரென முளைத்த இந்த பதாகைகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தை மார்பிங் செய்து
1980 களில் மிகவும் புகழ்பெற்ற விளம்பரமாக வாஷிங் பவுடர் நிர்மா விளம்பரம் இருந்தது. இந்த பவுடரை பயன்படுத்தினால் துணிகள் வெண்மையாக மாறும் என்று விளம்பரப்படுத்தப்படும். விளம்பரத்தில் தோன்றும் ஒரு சிறுமியும் பெரும் பிரபலம் அடைந்து இருந்தார். இந்த நிலையில், இந்த விளம்பரத்தை வைத்து அமித்ஷாவை பாரத ராஷ்ட்ர சமிதி கட்சி கேலி செய்துள்ளது. அதாவது, ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பாஜகவில் இணைந்தால் தூய்மையானவர்களாக மாற்றப்படுவார்கள் என்று விமர்சிக்கும் வகையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த பிற கட்சி தலைவர்களின் படத்தை மார்பிங் செய்து இந்த விளம்பர பதாகைகளை வைத்திருந்தது.

கேசிஆர் மகளிடம் அமலாக்கத்துறை விசாரணை
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை கடந்த 11 ஆம் தேதி சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. மீண்டும் அடுத்த மாதம் 6 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பாஜக - கேசிஆர் இடையே வார்த்தை யுத்தம்
ஆளும் பாஜக அரசு தனது தந்தையை மிரட்டும் விதமாக விசாரணை அமைப்புகளை தனக்கு எதிராக முறைகேடாக பயன்படுத்துவதாக கவிதா விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், இன்று ஐதராபாத் வரும் பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை கேலி செய்யும் விதமாக பதாகைகளை பி.ஆர்.எஸ் கட்சி வைத்து இருப்பது தெலுங்கானாவில் பாஜக - கேசிஆர் கட்சி இடையே வார்த்தை யுத்தத்திற்கு வழி வகுத்துள்ளது.

கவிதாவிடம் விசாரணை
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில், கவிதா உள்ளிட்ட சிலர் 'சவுத் குரூப்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்து, அதிக சலுகைகளை பெற்றதாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை கவிதாவிடம் விசாரணை நடத்தி வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications