'பாவம்யா புஷ்பா புருஷன்'.. லிப் கிஸ் கொடுக்க போய்.. நாக்கை கடித்து .. அடுத்து நடந்த ட்விஸ்ட்
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் குடும்ப சண்டையில் மனைவியை சமாதானம் செய்ய லிப் கிஸ் கொடுக்க முயன்ற கணவன் நாக்கை மனைவி கடித்து வைத்தார். காயம் அடைந்த கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து வலுக்கட்டாயமாக தனது கணவன் வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுக்க முயன்றதால் நாக்கை கடித்ததாக மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனிடையே தனிப்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் கணவரின் நாக்கை மனைவி கடித்துள்ளார் என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இன்று போலீசார் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தின் துக்கலி அருகே எல்லம்மகுட்டா தாண்டா கிராமத்தை சேர்ந்தவர்கள் தாராசந்த் நாயக் - புஷ்பாவதி தம்பதி.
இவர்கள் கடந்த 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த தம்பதியருக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே பிரச்சினைகள் காரணமாக, கடந்த இரண்டு வருடங்களாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இவர்கள் அடிக்கடி போடும் சண்டை அந்த கிராமத்தில் ஏக பிரபலம்.
வெள்ளிக்கிழமை காலை, தம்பதியினருக்கு இடையே மீண்டும் பலத்த சண்டை ஏற்பட்டிருக்கிறது. சண்டை முடிந்ததும் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்த போது , தாராசந்த் அலறியபடி வந்துள்ளார். என்ன என்று விசாரித்த போது நடந்த சம்பவம் வெளியே வந்தது.
சண்டை முடிந்ததும் மனைவியை சமாதானம் செய்ய லிப் கிஸ் கொடுக்க முயன்ற கணவன் தாராசந்த் நாயக்கின் நாக்கை மனைவி புஷ்பாவதி கடித்து வைத்தார். இதையடுத்து காயம் அடைந்த கணவன் தாராசந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து வலுக்கட்டாயமாக தனது கணவன் வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுக்க முயன்றதால் நாக்கை கடித்ததாக புஷ்பாவதி ஜோனகிரி போலீசில் வாக்குமூலம் அளித்தார்.
இதற்கிடையில், தாராசந்த் நாயக் தனது நாக்கை வேண்டுமென்றே தன் மனைவி கடித்ததாக குற்றம் சாட்டினார்.
அவர் தனது மனைவியின் நடத்தை குறித்து போலீசில் புகார் அளித்தார். தன் மனைவிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞருடன் கள்ள தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும் புகாரில், என் மனைவி கொன்றுவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். லிப் கிஸ் கொடுக்க முயன்ற கணவனின் நாக்கை மனைவி கடித்து வைத்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications