மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம்.. பக்தர்கள் குழுவாக செல்லுங்கள்.. திருப்பதி தேவஸ்தானம் அட்வைஸ்
ஐதராபாத்: திருப்பதி திருமலையில் சிறுத்தை, கரடி நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பதால் நடந்து செல்லும் பக்தர்கள் தனித் தனியாக செல்லாமல் குழுவாக செல்லுமாறு தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆந்திராவில் புகழ்பெற்ற திருப்பதி திருமலை கோவில் உள்ளது. தினமும் இங்கு பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆந்திரா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் குடியிருக்கும் சேஷாசலம் வனப்பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி இரவு அலிபிரி மலைப்பாதையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் ஏழுமலையானை தரிசிக்க சென்றனர். அப்போது, சிறுத்தை ஒன்று 3 வயது சிறுவனான கவுஷிக்கை கவ்வி சென்றது. இதை கவனித்த மக்கள் கத்தி கூச்சல் போட்டதும் சிறுவனை விட்டுவிட்டு சிறுத்தை ஓடியது. பின்னர் பலத்த காயம் அடைந்த நிலையில் சிறுவன் காயம் அடைந்தான்.
இதற்கு மறுவாரமே நெல்லூரை சேர்ந்த லக் ஷிதா என்ற 6-வயது சிறுமி, சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். திருப்பதி மலைப்பாதையில் நடந்து செல்பவர்களை வனவிலங்குகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்ததால் பக்தர்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து, கூண்டுகள் வைத்து சிறுத்தைகளை பிடிக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கிடையே, திருமலைக்கு மலையேறி செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டத்தையும் தேவஸ்தானம் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.

தொடர்ந்து அலிபிரி மலைப்பாதையில் 7-வது மைல், லட்சுமி நரசிம்மர் கோயில் பகுதிகளில் 320 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில், அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தைகள் மற்றும் கரடி ஆகியவற்றின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் பக்தர்கள் குழுவாக செல்ல தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நரசிம்மர் கோயில் பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் தென்பட்டதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. சிறுத்தைகள் நடமாட்டம் தென்பட்டு இருப்பது தெரியவந்ததால் பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் பக்தர்களுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications