ஈவிஎம் வேலை செய்யவில்லை.. ஆந்திராவில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.. முதல்வர் சந்திரபாபு கடிதம்!
ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார்.
Recommended Video

ஹைதராபாத்: ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார்.
ஆந்திராவில் இன்று லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்து வருகிறது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை இடங்கள் உள்ளது. அங்கு மொத்தம் 3.93 கோடி பேர் இன்று வாக்களிக்க இருக்கிறார்கள்.
அங்கு 46,120 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆந்திராவில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 523 வாக்குப்பதிவு எந்திரங்கள், 100க்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளது.

எங்கு எல்லாம்
குண்டூர், அனந்தப்பூர், விசாகப்பட்டினம், கோதாவரியில் வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. எந்திர கோளாறு காரணமாக வாக்குபதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் தொடங்கி உள்ள நிலையில் கோளாறு காரணமாக ஆந்திராவில் தேர்தல் பல இடங்களில் நடக்கவில்லை.

கடிதம்
காலையில் இருந்து பல இடங்களில் இன்னும் வாக்குப்பதிவே தொடங்கவில்லை. இந்த நிலையில் ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார்.

ஆந்திரப்பிரதேச தேர்தல்
ஆந்திரப்பிரதேசத்தில் 30 சதவீத வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரம் செயல்படவில்லை. இதனால் வாக்களிக்க வந்த மக்கள் எல்லோரும் திரும்பி சென்றுவிட்டார்கள். இப்படி சென்ற மக்கள் மீண்டும் வாக்களிக்க வர மாட்டார்கள். இது பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்.

மக்கள் கோபம்
சில இடங்களில் மக்கள் கோபமாக வாக்குச்சாவடிகளில் சண்டை கூட போட்டு இருக்கிறார்கள். இதனால் வாக்கு சதவிகிதம் பெரிய அளவில் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் உடனடியாக இந்த பகுதிகளில் தேர்தலை நிறுத்திவிட்டு, இன்னொரு நாள் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications