தெலுங்கானா: 'ஹைதராபாத்’ பெருநகரங்களில்தான் ஒர்ஸ்ட் வாக்குப் பதிவு.. இவ்வளவு மோசமாகவா இருக்கும்!
ஹைதராபாத்: லோக்சபா தேர்தலில் தெலுங்கானாவின் ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில்தான் மிக மோசமான அளவு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
லோக்சபா தேர்தலின் 4-வது கட்டமாக தெலுங்கானாவில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. தெலுங்கானாவின் 17 லோக்சபா தொகுதிகளிலும் நேற்று 64.74% வாக்குகள் பதிவாகின.

தெலுங்கானா மாநிலத்தின் 4 முக்கியமான பெருநகரங்கள் ஹைதராபாத், செகந்திராபாத், மல்காஜ்கிரி, செவல்லா ஆகியவை. இந்த 4 பெரு நகரங்களிலும் லோக்சபா தேர்தலில் வாக்குப் பதிவு மிக மோசமாக குறைந்துள்ளது.
இதில் ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் மிக மோசமாக வெறும் 39.17% வாக்குகள் பதிவாகின. 2019-ம் ஆண்டு தேர்தலில் ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் 45% வாக்குகள் பதிவாகி இருந்தன. ஹைதராபாத் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மலக்பேட் தொகுதியில் மிக மிக குறைந்தபட்சமாக வெறும் 37.84% வாக்குகள் மட்டுமே பதிவாகின. சார்மினாரில் 38%, சந்திரயான்குட்டாவில் 38.24% வாக்குகள் பதிவாகின. கர்வானில் சற்று ஆறுதலாக 40.57% வாக்குகள் பதிவாகின.
செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் வெறும் 42.48% வாக்குகளே பதிவாகின. 2019-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் 3% குறைவு
இந்தியாவில் மிக. அதிக அளவிலான வாக்காளர்களைக் கொண்டது தெலுங்கானாவின் மல்காஜ்கிரி தொகுதி. மொத்தம் 37.80 லட்சம் வாக்காளர்களைக் கொண்டது. இந்த தொகுதியிலும் கூட 50% கூட வாக்குகள் பதிவாகவில்லை. மல்காஜ்கிரி தொகுதிதான் மினி இந்தியா என்று அழைக்கப்படும். இத்தொகுதியில்தான் பல்வேறு மொழி பேசுகிற பல்வேறு மாநிலத்தவர் வசிக்கின்றனர். மல்காஜ்கிரி தொகுதியில் 49.60% வாக்குகளே பதிவாகின. 2019-ம் ஆண்டும் ஏறத்தாழ இதே அளவு வாக்குகளே பதிவாகின. செகந்திராபாத் கண்டோமெண்ட் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 50.34% வாக்குகள் பதிவாகின். இது மல்காஜ்கிரி தொகுத்யில் அடங்கும்.
செவல்ல லோக்சபா தொகுதியில்தான் ஐடி நிறுவனங்களை உள்ளடக்கிய சைதராபாத் இடம் பெறுகிறது. இத்தொகுதியில் 53.15% வாக்குகள் பதிவாகின. அதிக அளவிலான சாஃப்ட்வேர் என்ஜினியர்களைக் கொண்ட செரிலிங்கம்பள்ளி பகுதியில் வெறும் 41.40% வாக்குகளே பதிவாகின.
ஹைதராபாத்தில் வசிப்பவர்கள் பொதுவாக ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். வார இறுதி நாட்களில் விடுமுறை நாட்களில் ஆந்திராவுக்கு சென்றுவிடுவர். இதனால் ஹைதராபாத் நகரங்கள் வெறிச்சோடி விடும். இதனால்தான் ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்கள் நேற்று காலை முதலே வாக்குப் பதிவில் படு மந்தமாக இருந்தன.
செகந்திராபாத் லோக்சபா தொகுதிக்குட்பட்ட நம்பள்ளியில் 37.30% வாக்குகளே பதிவாகின. திரை உலக பிரபலங்கள் உள்ளிட்ட விவிஐபிகளின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 39.38% வாக்குகள் பதிவாகின.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications