"என் பிரண்ட்ஸ் கூட உல்லாசமா இருக்கணும்.." மனைவியை மிரட்டிய கணவர்.. பிஞ்சு குழந்தையையும் விடவில்லை
ஹைரதாபாத்: தெலங்கானாவில் இளம் பெண் ஒருவரைத் தனது கணவரே பாலியல் கொடுமைப்படுத்தி உள்ளார்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் பாலியல் ரீதியான குற்றங்கள் சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
பெரும்பாலான நேரங்களில் நன்கு தெரிந்த நபர்கள் மூலமாகவே இந்த பாலியல் குற்றங்கள் நடக்கிறது. பெண்கள் துணிச்சலாகப் புகார் அளிக்க வேண்டும் என போலீசார் தொடர்ந்து கோரிக்கை விடுத்தே வருகின்றனர்.

ஹைதராபாத்
இதற்கிடையே ஹைதராபாத்தில் தனது மனைவி நண்பர்களுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்திய கொடூர கணவரை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர். 25 வயதான அந்த பெண் ஹைதராபாத்தின் சந்திராயன்குட்டா பகுதியில் வசித்து வருகிறார். அவருக்குக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அது அப்படியே காதலாக மாற அவர்கள் திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.

புகார்
அவர்களுக்கு 1.5 வயதில் அழகிய ஆண் குழந்தையும் உள்ளது. இருப்பினும், சில மாதங்களாகவே அந்த நபர் தனது மனைவியை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் வலியுறுத்தி உள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்த நிலையில், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் அஞ்சிய அந்த பெண்ணும் வேறு வழியின்றி கணவரின் நண்பர்களுடன் உடலுறவு கொண்டு உள்ளார்.

கொடூரம்
ஆனாலும், இந்த கொடூரம் முடிந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் இதேபோல அவர் மனைவியை டார்ச்ர் செய்து வந்துள்ளார். ஆனால், இது எல்லை மீறிச் செல்லவே கடந்த மார்ச் மாதம், அந்த பெண் விவாகரத்து செய்தார். அதன் பின்னரும் திருந்தாத அந்த ஆண், தொடர்ந்து முன்னாள் மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.

டார்ச்சர்
ஒரு கட்டத்தில் கணவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் கடந்த நவ.2ஆம் தேதி அந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். நல்வாய்ப்பாக அதில் அந்த பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை. அதன் பின்னரும் கூட அந்த கொடூரன் அவரை நிம்மதியாக இருக்கவில்லை. மறுநாளே, அதாவது நவ.3ஆம் தேதி யாரும் வீட்டில் இல்லாத நேரம் அந்த பெண் வீட்டிற்குச் சென்ற அந்த இளைஞர், குழந்தையை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த நபரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

உதவி எண்கள்
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications