Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெறித்து ஓடும் தலைவர்கள்..கையை பிசையும் ஜெகன்.. அலறவிடும் ஆந்திர அரசியல்.. என்ன இப்படி ஆகிடுச்சு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவில் சில மாதங்களில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடக்கும் நிலையில், அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு இப்போது தலைவலி ஆரம்பித்துள்ளது.

தெலுங்கானாவில் சமீபத்தில் தான் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கேசிஆர் கட்சி படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் அங்கே முதல்முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.

 Many leaders are now quitting from YSR Congress Headache for Jagan Mohan Reddy

இதற்கிடையே மற்றொரு தெலுங்கு பேசும் மாநிலமான ஆந்திராவிலும் ஆளும் தரப்புக்கு இப்போது சிக்கல் எழுந்துள்ளது. அங்கே ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வரிசையாகப் பல தலைவர்கள் வெளியேறுவது அம்மாநில முதல்வர் ஜெகனுக்கு தலைவலியைக் கொடுக்கிறது.

விலகினார்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசியல்வாதியான லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு தனது லோக்சபா எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். ஆந்திராவில் இந்தாண்டு லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடைபெறும் நிலையில், இது அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேவராயலு ஆந்தாரவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டையில் இருந்து லோக்சபாவுக்கு தேர்வானவர். இந்த தொகுதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சீட் தர தலைமை விரும்பியுள்ளது. அதற்குப் பதிலாக குண்டூரில் போட்டியிடும்படி அவரை கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தேவராயலு இப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். இனிமேல் கட்சியில் ஏற்படும் குழப்பத்திற்குத் தான் பொறுப்பில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மூன்றாவது நபர்: கடந்த 2019 தேர்தலில் இவர் 50,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இருந்து வெளியேறிய மூன்றாவது நபர் இவராவர்.

முன்னதாக மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்த லோக்சபா எம்பியான பாலசௌரி வல்லபனேனி, 10 நாட்களுக்கு முன்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இருந்து விலகி பவன் கல்யாணின் ஜன சேனாவில் இணைந்தார். அதற்கு முன்பு கர்னூல் எம்.பி.யான சஞ்சீவ் குமார் ராஜினாமா செய்திருந்தார். அவரும் தெலுங்கு தேசம் அல்லது ஜனசேனா கட்சியில் இணையலாம் எனத் தெரிகிறது.

என்ன காரணம்: ஆந்திராவில் ஆளும் அரசுக்கு எதிராகப் பொதுமக்களிடையே அதிருப்தி அதிகமாக இருக்கிறது. இதனால் நிலைமையை சமாளிக்க ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பல சிட்டிங் எம்பிக்களுக்கு சீட் வழங்க வேண்டாம் என யோசிக்கிறது. அல்லது அவர்களை வேறு தொகுதியில் போட்டியிட வைக்க யோசிக்கிறது. இதுவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களை அதிருப்தியில் தள்ளியுள்ளது.

ஜெகன் அரசு இப்போது மக்களிடம் இருந்து வாக்குகளைப் பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆந்திர அரசு சாதி வாரி கணக்கெடுப்பை ஆரம்பித்தது. பீகாருக்குப் பிறகு, நாட்டில் சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தும் இரண்டாவது மாநிலம் ஆந்திராவாகும். முதலில் 139 பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மட்டுமே உள்ளடக்கியதாக இந்த சர்வே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பிறகு அனைத்து சாதியினரும் கணக்கெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவைப் பொறுத்தவரை அங்கே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையே தான் இப்போது போட்டி. இதற்கிடையே தேசிய கட்சியாகக் காங்கிரஸும் அங்கே புது தெம்புடன் களமிறங்குகிறது. தற்போது சிட்டிங் முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்எஸ் ஷர்மிளா ஆந்திரா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+