எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க.. ஸ்ரீஹரி கட்டிய தாலி மட்டும் இருக்கு.. கண் கலங்கிய டிஸ்கோ சாந்தி
ஹைதராபாத்: என் கணவர் ஸ்ரீஹரியிடம் கடன் வாங்கியவர்கள் அவர் இறந்த பிறகு அந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக டிஸ்கோ சாந்தி கண்கலங்கினார்.
தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடனம் ஆடி வந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. மறைந்த நடிகர் சி.எல். ஆனந்தனின் மகளான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். நிறைய படங்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

இவர் 1996ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை மணந்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர் தெலுங்கு திரையுலகில் கொடிக் கட்டி பறந்தவர். தமிழில் கூட சில படங்களில் நடித்துள்ளார். அவர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஐபிஎஸ் அதிகாரி தேவராஜ் என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.
இந்த நிலையில் பிரபுதேவா இயக்கிய ராம்போ ராஜ்குமார் படத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீஹரி நடித்துக் கொண்டார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கல்லீரல் பிரச்சினை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். அவரது மரணம் டிஸ்கோ சாந்தியை மிகவும் புரட்டி போட்டது. அவர் அண்மைக்காலமாக டிவி சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த பேட்டிகளில் அவர் கூறியிருப்பதாவது: தனது கணவருக்கு மும்பையில் மருத்துவமனையில் ஒரு ஊசி போடப்பட்டதுதான் அவரது இறப்புக்கு காரணம்.
ஐசியுவில் இருந்த கணவரை பார்க்க நைசாக உள்ளே போன போதுதான் அவருடைய கண்கள், காதுகள், மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. அவர் படுத்திருந்த படுக்கையெல்லாம் ஒரே ரத்த கறை. உடனே நான் அலறி கத்தினேன். பின்னர் மருத்துவர்களும் அங்கு இந்தி மொழியில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கடைசியில் பாவா என்னை விட்டு போய்விட்டார் என கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
ஸ்ரீஹரி படப்பிடிப்புகளில் கூட யாருக்காவது உதவி கொண்டே இருப்பார். அது போல் ஆந்திராவில் ஒரு 3 கிராமங்களில் தண்ணீர் குடிக்கும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மாற்றுத்திறனாளியாக பிறப்பதாக தகவல் அறிந்த ஸ்ரீஹரி அந்த 3 கிராமங்களையும் தத்தெடுத்து அங்கு நல்ல குநீடிர் சுத்திகரிக்கும் ஆலைகளை அமைத்தாராம். இவரை பார்த்துதான் மகேஷ் பாபு உள்ளிட்டோர் கிராமங்களை தத்தெடுத்து உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் டிஸ்கோ சாந்தி தற்போது மீண்டும் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் எனது கணவர் உயிரோடு இருந்த போது நிறைய பேருக்கு பணம் கடனாக கொடுத்திருக்கிறார். அது போல் அவரும் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவர் இறந்த பிறகு நாங்கள் பணம் கொடுக்க வேண்டியவர்கள் மட்டுமே எங்கள் வீட்டிற்கு வந்து கடன் கேட்டனர்.
ஆனால் எங்களுக்கு கடன் தர வேண்டியவர்கள் யாருமே எட்டி கூட பார்க்கவில்லை. நாங்கள் வாங்கிய கடனுக்காக எங்களிடம் இருந்த நகை, கார், நிலம் எல்லாத்தையும் விற்று கடனை அடைத்தோம். ஒரு காருக்கு தவணை கட்ட முடியாமல் அந்த காரை வங்கி திருப்பி எடுத்துக் கொண்டது. இப்போது என்னிடம் அவர் கட்டியிருந்த தாலி மட்டுமே இருக்கிறது. இரண்டு வீடுகளின் வாடகையை வைத்து காலத்தை ஓட்டி வருகிறோம். திரைத்துறையினர் கூட எங்களை சந்தித்து எங்கள் குறைகளை கேட்கவில்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications